புதுச்சேரி: புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
பஞ்சு மிட்டாய் சேலை கட்டி.. இந்தப் பாட்டை யாராவது மறக்க முடியுமா.. சூப்பர் ஹிட் பாட்டு.. பாட்டு மட்டுமா.. பஞ்சு மிட்டாயும்தான்.. சின்னப் புள்ளையா இருந்தப்ப மட்டுமல்லாமல் இப்போதும் கூட பீச்சுக்கோ, பொருட்காட்சிக்கோ, வெளியில் எங்காவது போனால், பஞ்சு மிட்டாயைப் பார்த்து விட்டால் போதும் வாயெல்லாம் நமநமக்கும்! அப்படி ஒரு கிரேஸ் பஞ்சு மிட்டாய்க்கு உண்டு. அந்த கிக்கே தனிதான்.
ஆனால் புதுச்சேரியில் இந்த பஞ்சு மிட்டாய்க்கு அதிரடியாக தடை விதித்து விட்டனர். காரணம் மேட்டர் அந்த அளவுக்கு அபாயகரமானதாக இருக்கிறது.!
புதுச்சேரியில் கடற்கரைச் சாலை, சுற்றுலா தலங்கள், பொது இடங்கள் என பல்வேறு இடங்களில் பஞ்சுமிட்டாய் விற்பனை எப்பொழுதும் விறுவிறுப்பாக நடைபெறும். குழந்தைகளை கவரும் விதத்தில், பல வண்ணங்களில் காட்சி அளிக்கிறது இந்த பஞ்சு மிட்டாய். குழந்தைகளின் ஆர்வத்தை தூண்டும் வகையில் இது காட்சி அளிப்பதால், பஞ்சு மிட்டாயை பார்த்தாலே குழந்தைகள் அழுது அடம் பிடித்து வாங்குவார்கள். அந்த அளவிற்கு குழந்தைகளை வசீகரிக்கும் தன்மை இந்த பஞ்சு மிட்டாயில் இருக்கிறது. பெற்றோரும் இதனை ஆர்வத்துடன் தங்களது குழந்தைகளுக்கு வாங்கிக் கொண்டும் வருகின்றனர்.
இந்த நிலையில், உணவு பாதுகாப்பு அதிகாரியான ரவிச்சந்தர் பஞ்சுமிட்டாயை வாங்கி சோதனை செய்து பார்த்துள்ளார். அப்போது தான் திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. அதாவது, மனிதர்களுக்கு கேன்சரை உருவாக்கும் ரசாயனம் இந்த பஞ்சு மிட்டாயில் கலந்து இருப்பது தெரிய வந்ததுள்ளது. குறிப்பாக, ரோடமின் பி என்ற வேதிப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ரசாயனம் எதற்காக பயன்படுத்தப்படுவது தெரியுமா? ஊதுபத்தி மற்றும் தீப்பெட்டிகள் தயாரிக்கும் போது வண்ணத்திற்காக பூசப்படும் நிறமியாகும் இது. குறைந்த விலையில் இந்த ரசாயனம் கிடைப்பதால் இதனை வாங்கி பஞ்சு மிட்டாய் விற்பனை செய்தவர்கள் பயன்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.
புதுச்சேரியில் விற்கப்படும் பஞ்சு மிட்டாயில் ரசாயனம் கலக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அதன் விற்பனைக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்கக் கூடாது. புதுச்சேரி அரசிடம் இருந்து மறு உத்தரவு வரும் வரை இந்த தடை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பஞ்சு மிட்டாய் உற்பத்தி செய்பவர்களை கண்டுபிடித்து உற்பத்தி இயந்திரங்களையும் கைப்பற்றியுள்ளனர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள். உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் வேதி பொருட்கள் கலந்து இருப்பதாக வெளியான தகவலை அடுத்து தற்போது இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தோஷமா வாங்கி சாப்பிட்டுட்டு இருந்தோம்.. அந்த "பஞ்சுல" கண்டதையும் கலந்து நெருப்பை வச்சுட்டீங்களேய்யா!
AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!
Lunch box recipe: கோவக்காய் வேர்க்கடலை பொறியல்.. ஒரு விசில்.. ஒரு பொறியல்.. ஓஹோ டேஸ்ட்!
Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?
ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!
Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
{{comments.comment}}