புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசச்சைச் சேர்ந்த சந்திரபிரியங்கா, புதுச்சேரி அரசியலில் அதிரடி காட்டியவரும், ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு பலரது அன்பைப் பெற்றவரும் ஆவார். அமைச்சராக இருந்த அவர் தற்போது அந்தப் பதவியிலிருந்து விலகி விட்டார். ஆனாலும் மக்களுடன் மக்களாக வலம் வரும் சந்திரபிரியங்கா போட்டுள்ள ஒரு குக்கிங் வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது.
என்னது குக்கிங் வீடியோவா.. சந்திர பிரியங்காவும் யூடியூபில் சமைக்க ஆரம்பித்து விட்டாரா அப்படின்னு தானே ஷாக் காட்டறீங்க. அதுதாங்க இல்லை. தனது மகன்ளுக்கு சூப்பராக சமையல் கற்றுக் கொடுத்துள்ளார் சந்திரபிரியங்கா. அதுதொடர்பான வீடியோதான் இது.
புதுச்சேரி அரசியலில் மூத்த தலைவராக வலம் வந்த மறைந்த சந்திரகாசுவின் மகள்தான் சந்திரிபிரியங்கா. என். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சந்திரபிரியங்கா, நெடுங்காடு- கோட்டுச்சேரி சட்டசபைத் தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அமைச்சராகவும் இருந்தார். பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். புதுச்சேரி அரசியலில் பிரபலமாக வலம் வரும் பெண் அரசியல் தலைவர் இவர் மட்டுமே. அந்த வகையில் புகழ் வெளிச்சத்திலும் இருக்கிறார் சந்திரபிரியங்கா.
அமைச்சர் பதவியிலிருந்து விலகி விட்டாலும் கூட மக்கள் பணியிலிருந்து அவர் கொஞ்சம் கூட விலகவேயில்லை. தொடர்ந்து சூறாவளியாக தொகுதியைச் சுற்றி வந்து கொண்டுதான் இருக்கிறார். ஏதாவது ஒரு விழா, நிகழ்ச்சி என்று அவர் மக்களோடு மக்களாக இருந்து கொண்டுதான் இருக்கிறார். சமீபத்தில் பெய்த கன மழை வெள்ள பாதிப்பின்போதும் கூட மக்களோடு மக்களாக இருந்தவர் சந்திரபிரியங்கா. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை நேரில் நின்று முடுக்கி விட்டவர்.
இந்த பிசியான ஷெட்யூலிலும் கூட ஒரு தாயாக தனது கடமைகளையும் அவர் சூப்பராக செய்து கொண்டும் இருக்கிறார். அவர் போட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோவில் சமையல் செய்து கொண்டிருக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. அதை விட முக்கியமாக அவரது இரு மகன்களும் கிச்சனில் பிசியாக இருக்கிறார்கள். அதாவது அம்மாவுக்கு சமையலில் உதவி செய்வதோடு, கூடவே சமையலையும் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதைத்தான் வீடியோவாக எடுத்துப்போட்டுள்ளார் சந்திரபிரியங்கா.
பசங்களுக்கு சமையல் செய்வது எப்படி என்பதை சொல்லிக் கொடுப்பதோடு அவர்களையே அந்த வேலைகளையும் செய்ய வைத்துள்ளார். அம்மாவும் பிள்ளைகளுமாகச் சேர்ந்து ஏகப்பட்டதை சமைத்துள்ளனர். அதாவது நண்டு வறுவல், முட்டை மசாலா, கூட்டு, மீன் வறுவல் என்று கலக்கியுள்ளனர். இதில் முட்டை மசாலாவில் முட்டையை மகன்களை விட்டே போட வைத்துள்ளார். அவர்களையே அதை டேஸ்ட் பார்க்க வைத்து எல்லாம் சரியா இருக்கா என்றும் கேட்டு அவர்களது ரியாக்ஷனை பார்த்து ரசித்துள்ளார் சந்திர பிரியங்கா.
இவர் ஏற்கனவே அமைச்சராக இருந்தபோதே தனது அலுவலகத்திலேயே தனது மகன்களுக்கு வீட்டுப் பாடம் செய்ய வைத்து ஹெல்ப் செய்து ஒரு சூப்பர் தாயாக தன்னை வெளிப்படுத்தியவர். அப்போதே பலரும் அவரைப் பாராட்டினர் என்பது நினைவிருக்கலாம். இப்போது சமையலும் கற்றுக் கொடுத்துள்ளார்.
இந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் போட்டுள்ள சந்திர பிரியங்கா கூடவே, பசியும் ருசியும் பாலின பேதம் பார்க்காதபோது சமைத்தல் பணி மட்டும் பெண்ணுக்கானதென மட்டுப்படுத்துவது மடமையன்றோ...
ஆணுக்கும் ஆங்கே ஒரு சமவாய்ப்பாய் பிள்ளைகள் இருவருக்கும் சமைக்கக் கற்றுத் தருவோம்... சமத்துவத்தை சமையலறையிலும் வளர்ப்போம்.. என்றும் கூறியுள்ளார்.
இது நல்லாருக்குள்ள. இப்பவே சமையல் முதல் கொண்டு எல்லா வீட்டு வேலைகளையும் கற்றுக் கொண்டால், நாளை திருமணமாகும்போது மனைவிக்கு உதவுவது எளிதாக இருக்கும் அல்லவா.. பரவாயில்லை.. நல்ல மாமியார் என்று எதிர்கால மருமகள்களிடம் பெயர் வாங்கி விடுவார் சந்திர பிரியங்கா.. சூப்பர்தான்!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
100 நாள் வேலைத்திட்டம்.. தகவல் அறியும் உரிமை சட்டம் .. வரலாறு படைத்த நாயகன் மன்மோகன் சிங்!
நல்ல தலைவர், பொருளாதார மேதையை நாடு இழந்து விட்டது... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
தமிழ்நாட்டின் மிகச் சிறந்த நண்பராக விளங்கியவர் மன்மோகன் சிங் .. முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
Manmohan singh.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்.. இந்தியாவின் சிறந்த பொருளாதார மேதை!
எப்ஐஆர் நகல் வெளியானது சட்டப்படி குற்றம்.. விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.. போலீஸ் கமிஷனர் அருண்
Annamalai.. சவுக்கால் அடிப்பேன்.. திமுக ஆட்சி போகும் வரை செருப்பு போட மாட்டேன்.. அண்ணாமலை ஆவேசம்!
Anna university: அண்ணா பல்கலைக்கழக சம்பவம்.. கடுமையான தண்டனை தர வேண்டும்.. கனிமொழி
Annamalai: சவுக்கடி, செருப்பு புறக்கணிப்பு, கடும் கோபம்.. வரலாறு காணாத ஆவேசம் காட்டிய அண்ணாமலை!
Chandrapriyanga.. மகன்களுக்கு சமையல் கற்று தரும் சந்திரபிரியங்கா.. செம்ம செம.. சூப்பர் அம்மாதான்!
{{comments.comment}}