ஊரு முழுக்க சாமி இருந்தா எப்படி இருக்கும்.. புதுக்குடி மாதிரி இருக்கும். 800 பேரைக் காத்த தெய்வங்கள்

Dec 21, 2023,07:13 PM IST

- மஞ்சுளா தேவி


ஸ்ரீவைகுண்டம்: ஊருல மழை தண்ணியைக் காணோம்.. சாமியைக் கும்பிட்டா வரும்னு கிராமப் பக்கங்கள்ல சொல்வாங்க.. அதுக்காக நிறைய சாங்கியங்களையும் செய்வாங்க.. ஆனால் ஒரு பெரு மழை பெரு வெள்ளத்தில் தத்தளித்த மக்களுக்காக ஒரு ஊரை சாமியாக மாறிய வரலாற்றைக் கண்டு மொத்த தமிழ்நாடும் உருகிப் போய் நிற்கிறது.


அதீத கனமழை.. வரலாறு  காணாத கனமழை.. பலத்த கனமழை.. வாழ்வில் இப்படி ஒரு கனமழையை பார்த்ததில்லை.. என்று சொல்லும் அளவுக்கு பல மடங்கு  கன மழை பெய்து தென் மாவட்டங்களை புரட்டிப் போட்டு விட்டது. இந்த சூழ்நிலையில்தான் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புதுகுடி கிராம மக்கள் சத்தம் போடாமல் மிகப் பெரிய செயலைச் செய்துள்ளனர்.. அந்த மனித நேயம் அத்தனை பேரையும் உருக வைத்துள்ளது. 




கடந்த  ஞாயிறன்று புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் அதீத கன மழை காரணமாக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டது. இதில் சுமார் 800 பயணிகள் சிக்கிக் கொண்டனர். தொடர்ந்து ரயில் நிலையத்தை சுற்றி தண்ணீர் அதிகரித்துக் கொண்டே இருந்தது. மண்ணரிப்பால் தண்டவாளம் சேதமடைந்தது. இதனால் ரயிலை இயக்க முடியவில்லை. 


தகவல் அறிந்த மீட்பு படையினர் ரயிலில் உள்ள 300 பயணிகளை மீட்டு அவர்களை அருகே உள்ள கிராமத்தில் தங்க வைத்தனர். இருப்பினும் தண்ணீர் 10  அடி அளவுக்கு உயர்ந்தால், மீதமுள்ள 500 பயணிகளை மீட்க முடியவில்லை. ரயில் நிலையத்தில் சிக்கிக்கொண்ட அன்று இரவு பயணிகள் வைத்திருந்த தண்ணீர், பிஸ்கட் ஆகியவற்றை உண்டு நிலைமையை சமாளித்து வந்தனர். மறுநாள் காலை வரை யாரும் உதவிக்கு வரவில்லை. ரயிலில் உள்ள முதியவர்கள், குழந்தைகள் என உணவு ,பால் போன்றவை கிடைக்காமல்  பசியால் தவித்து வந்தனர்.


இந்த நிலையில்தான் ஒரு அபயக் கரம் அல்ல அல்ல.. "கரங்கள்" மெல்ல நீண்டு வந்தன.. மேலூர் புதுக்குடி கிராமம்..  ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் உள்ளது. ரயிலில் சிக்கிக் கொண்டவர்களின் நிலையை பார்த்துப் பதைத்துதப் போன அந்தக் கிராம மக்கள் " ஏ மக்கா இங்க வாங்கய்யா.. வாங்கம்மா".. என்று பயணிகளை கிராமத்தில் வந்து தங்குமாறு அழைப்பு விடுத்தனர். ஒரு சிலர் இவர்களின் அழைப்பை ஏற்று அந்த கிராமத்திற்கு சென்றனர். அங்கு சென்று பார்த்தால் மொத்தமே 25 வீடுகள் தான் உள்ளது.. அதை விட முக்கியம்.. அந்த கிராமமும்  கூட தண்ணீரில்தான் மிதந்து கொண்டிருந்தது.




ஆனால் அந்த ஊர் மக்களின் உள்ளம் ரொம்ப உயரத்தில் இருந்தது.. ஊரில் உள்ள பத்ரகாளி அம்மன் கோவிலில் ரயில் பயணிகளை தங்க வைத்தனர். கிராம மக்கள் அனைவரும் இணைந்து அவர்களிடம் இருந்த அரிசி, பருப்பு, காய்கறிகள் ,முதலிய பொருட்களை வைத்து தங்களின் அன்பையும் கூடவே கலந்து உணவு தயாரித்துக் கொடுத்தனர். பசியால் வாடிய மக்களுக்கு அது அமிர்தமாக இருந்தது.. குழந்தைகளுக்கு பால் கொடுக்கவும் ஏற்பாடு செய்தனர்..


தங்களிடம் இருக்கோ, இல்லையோ, இல்லை என்று சொல்லாமல் தங்களிடம் இருக்கும் பொருட்களை வைத்து உணவு கொடுக்க நினைத்த மனிதநேயம் உள்ள மக்களை நினைத்து மிகவும் பெருமையாக உள்ளது.. ஆச்சரியமாகவும் இருக்கிறது.. இந்த நேரத்தில் இருந்த இடத்திலிருந்து "அதைப்  பண்ணலியா.. இதைப் பண்ணலியா.. நாங்க அப்படி பண்ணோம்.. இப்படிப் பண்ணோம்" என்று  வெட்டி வசனம் பேசிய பலர் நம் கண் முன்பு நிழலாடிச் சென்றனர்.. . இந்த மக்களோ.. எதுவுமே பேசாமல், செய்து காட்டி உண்மையான மனிதர்களாக நடந்து கொண்டனர்.


இந்த கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் ஏழ்மையில் இருந்தாலும் அனைவரின் வயிற்றுப் பசியை அறிந்து உணவு கொடுத்த தெய்வங்கள். ஒருவேளை உணவு மட்டுமல்லாமல், இரண்டு நாட்களும் ஐந்து வேளை உணவு கொடுத்த கொடை வள்ளல். இப்படி இந்த பூமியில் மனிதநேயம் கொண்ட மக்கள் இருக்கும் வரை எத்தனை இயற்கை பேரிடர் வந்தாலும் அதனை எதிர்த்து நின்று ஒற்றுமையுடன் மீண்டு எழுவோம். தெய்வத்தை பார்க்கவில்லை என்று புலம்பும் மக்களிடத்தில் புதுக்குடி கிராம மக்களே தெய்வ வடிவில் வந்து ரயில் பயணிகளுக்கு உதவிக்கரம் நீட்டி உள்ளனர்.




செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கிக்கொண்ட 800 பேரை காப்பாற்றிய புது குடி கிராம மக்கள்  

மட்டும் இல்லாமல் போயிருந்தால், நாங்கள் மன உளைச்சலில் செத்துப் போய்விடும் என பயணிகள் நெகிழ்ச்சியுடன் கூறினர்.  நேர்மையும், கருணையும் கொண்டவர்களிடம் அன்பு வெளிப்படும். நாம் மனிதர்களாய் பிறப்பதற்கு ஒரே அர்த்தம் பிறர் கஷ்டப்படும் வேளையில் அவர்களுக்கு உதவி செய்வதே. அப்படிப்பட்ட மனித குலத்தின் மகத்துவம் மனிதனாய் பிறப்பதில் இல்லை மனிதாபிமானமாக இருப்பதில் உள்ளது என மகாத்மா காந்தியடிகள் கூறியுள்ளார். 


இப்படி மனித நேயம் கொண்ட புதுக்குடி கிராம மக்கள் நேரடியாக களத்தில் இறங்கி உதவி செய்துள்ளனர். இவர்கள் செய்த இந்த உதவியை வாழ் நாளில் என்றும் மறக்காமல் அவர்கள் நலமுடன் வாழ பிரார்த்திப்போம்.. இனிமேல் திருச்செந்தூருக்குப் போகும்போது அப்படியே புதுக்குடியையும் பார்த்து ஒரு கும்பிடு போட்டுட்டு வாங்க மக்களே.. அவர்களும் தெய்வம்தான்!

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்