வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!

Apr 18, 2025,11:42 AM IST

திருநெல்வேலி: வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை கண்டித்து, அனைத்து ஜமாத் கட்சி சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.


கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி நாடாளுமன்றத்தில்  வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா  தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு எதிர்ப்புக்கு மத்தியில் வக்பு சட்ட மசோதா குடியரசு தலைவர் ஒப்புதலுடன் கடந்த ஏப்ரல் ஒன்பதாம் தேதி முதல் சட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.


இதனை கண்டித்து திமுக, காங்கிரஸ், திர்ணாமுல், சமாஜ்வாதி உள்ளிட்ட மொத்தம் 140 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் கே.வி விஸ்வநாதன் ஆகியோர் அமர்வில் நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்டு உச்ச நீதிமன்றம் கடந்த இரண்டு நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்தது.




அதன்படி, நேற்று வக்பு சட்ட திருத்தத்திற்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் வக்பு திருத்த சட்டத்தின்படி எந்த உறுப்பினர் நியமனமோ சொத்துக்களின் நிலம் வகைப்படுத்துதலோ கூடாது எனவும் அறிவுறுத்தி இருந்தது. இதற்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு நன்றி தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில் தமிழ்நாட்டில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகின்றன. அதில் நெல்லை மேலப்பாளையத்தில்

அனைத்து ஜமாத், அனைத்து அரசியல் கட்சி சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. ஆட்டோ, கார், வேன், போன்ற வாகனங்களும் இயக்கவில்லை.  இதனால் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.


அதேபோல் வக்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றது. அப்போது தொண்டர்கள் பதாகைகளை ஏந்தியபடி ஒன்றிய அரசை கண்டித்து பல்வேறு முழக்கம் எழுப்பினர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Chennai AC EMU Train service.. தொடங்கியது ஏசி புறநகர் ரயில் சேவை.. கட்டணம் தான் ஜாஸ்தி!

news

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.. துரை வைகோ அறிவிப்பு

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் நடந்து செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

news

மகள், கணவரின் Mental Torture.. வருங்கால மருமகனுடன் எஸ்கேப் ஆன மாமியார்.. திரும்பி வந்ததும் டிவிஸ்ட்!

news

வேண்டியதை நடத்தித் தரும் அபிஜித் நேரம்.. அற்புதமான அந்த 24 நிமிடங்கள்!

news

பாபா வங்கா சொன்னது நடக்கப் போகிறதா?.. திக் திக் பரபரப்பு எதிர்பார்ப்புடன் உலக நாடுகள்!

news

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பா?.. திட்டவட்டமாக மறுத்தது மத்திய அரசு

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 19, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

தங்கம் விலையில் மாற்றமில்லை.... நேற்றைய விலையே இன்றும் தொடர்கிறது!

அதிகம் பார்க்கும் செய்திகள்