மாணவியை மது விருந்துக்கு அழைத்த.. திருநெல்வேலி கல்லூரி பேராசிரியர் அதிரடி கைது!

Sep 14, 2024,02:52 PM IST

திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் கல்லூரி மாணவியை மது குடிக்க அழைத்ததாக தனியார் கல்லூரி பேராசிரியர் செபஸ்டின் என்பவர் கைது செய்யப்பட்டார். மற்றொருவர் தலைமறைவாகியுள்ளதால் போலீசார் தேடி வருகின்றனர்.


சமீப காலமாக வேலியே பயிரை மேய்வது போல, பாதுகாப்பு தர வேண்டிய ஆசிரியர்களால் மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் கதைகள் அதிகமாக நடந்து வருகிறது. இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி வெளியாகி மாணவர்களையும், பெற்றோர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. இதற்கு அரசு தண்டனைகளை கடுமையாக்கினால் தான் இது தொடர்பான சம்பவங்கள் குறையும் என்று பெற்றோர்கள் கூறி வருகின்றனர்.




இந்நிலையில், திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் கல்லூரி மாணவி ஒருவரிடம் அத்துமீறி நடந்து கொண்டுள்ளார் ஒரு பேராசிரியர். அந்தக் கல்லூரியில் சம்பந்தப்பட்ட மாணவி, முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். அந்த மாணவியை கடந்த சில நாட்களுக்கு முன் அதே கல்லூரியில் பணியாற்றும் இரண்டு ஆசிரியர்கள் இரவு மது அருந்த கூப்பிட்ட சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த இரண்டு ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவியின் செல்போனுக்கு கால் செய்துள்ளனர். இரண்டு ஆசிரியர்களும் தேவையற்ற வகையில் பேசியதோடு, இரவு நேரத்தில் மது குடிப்பதற்கும் அழைத்துள்ளனர்.


இந்த சம்பவத்தினால் அதிர்ச்சியடைந்த மாணவி, நடந்த சம்பவத்தை தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர்  அதே பகுதியை சேர்ந்த காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகார் கொடுத்த சிறிது நேரத்திலேயே புகாரை திரும்ப பெற்றனர். இது தொடர்பாக நாங்கள் புகார் கொடுத்தால் எங்களது மகளின் படிப்பு பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இதனால், போலீசாரும், எழுதி வாங்கிக் கொண்டு அந்த பெண்ணின் பெற்றோர்களை அனுப்பி விட்டனர். 


இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஊடகங்களில் செய்தி பரவிய நிலையில், அந்த இரண்டு ஆசிரியர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார்கள் வலுத்தது. இதனை அறிந்த கல்லூரி நிர்வாகம் அந்த 2 ஆசிரியர்களையும் டிஸ்மிஸ் செய்தது. இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததுடன் மது அருந்த அழைத்த பேராசிரியரான செபாஸ்டின் என்பவரைக் கைது செய்தனர். மற்றொரு ஆசிரியர் தலைமறைவான நிலையில், அவரையும் தேடும் பணி நடந்து வருகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு

news

பாமகவை பிளவுபடுத்துவாரா டாக்டர் அன்புமணி.. ராமதாஸின் திட்டம் என்ன?.. பரபரப்பில் தமிழக அரசியல்

news

தமிழகத்திற்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையால்.. பாஜக அரசியல் சூழல் எழுச்சி பெறுமா‌..?

news

மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முன்னோடி திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

news

Flower Market Price: பங்குனி உத்திரம்... கோயம்பேட்டில் பூக்களின் விலை உயர்வு

news

சிங்கப்பூர் அரசு விழாவில்.. வாழ்வியல் இலக்கியப் பொழில் சிறப்பு உரையாளராக.. முனைவர் மு. ஜோதிலட்சுமி

news

பனையூரில் நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

news

அஜித் படத்திற்கு.. வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

news

அதிரடி காட்டி வரும் தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.2160 உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்