என்னாது.. ரெஃபிரிஜிரேட்டரில் இந்த உணவுப் பொருட்களையெல்லாம் வைக்கவே கூடாதா?

Sep 23, 2024,06:15 PM IST

பொதுவாகவே சமைக்கப்பட்ட மற்றும் சமைக்கப்படாத உணவுகள் கெட்டுப் போகாமல் பாதுகாப்பதற்காகவே நாம் ஃபிரிட்ஜை  பயன்படுத்துகிறோம். அதில் எதை வைக்க வேண்டும். எதை வைக்கக்கூடாது என்ற விழிப்புணர்வு இல்லாமல் மக்கள் எல்லா பொருட்களையும் ஃப்ரிட்ஜுக்குள் வைத்து உண்டு வரும் நடைமுறைக்கு மாறி வருகின்றனர்.


நாம் எதையும் வீணாக்க கூடாது சிக்கனமாக இருப்பதே சிறந்தது என்ற பெயரில்  மீந்து போன சாம்பார் குழம்பு பொரியல், ரசம் என  குப்பையில் கொட்ட வேண்டிய அனைத்தையும் நம் வயிறு என்னும் குப்பைத் தொட்டிக்குள் கொட்டுகிறோம். அதுதான் உண்மை.‌ நம் வயிறு என்ன குப்பைத் தொட்டியா.. மீந்துபோன உணவுகள் மற்றும் கெட்டுப்போன உணவுகளை போட்டு விட்டு,நமக்கு எதுவும் ஆகாது என்று நினைப்பதற்கு.




சரி நம் ஃப்ரிட்ஜின்  சீதோசன நிலை எப்படி இருக்கும் என்று அறிந்ததுண்டா. ஏனென்றால் வைக்கப்பட்ட   உணவுகள் ஃப்ரிட்ஜில் கெட்டுப் போகாமல் இருக்க அதன் சீதோசன நிலை சரியான விகிதத்தில் இருக்கிறதா என்பதை அவ்வப்போது அறிய வேண்டும். இல்லையென்றால் அதில் வைக்கப்பட்ட உணவுகள் கெட்டுப்போய் அவற்றை சரியாக சமைக்காமல் நாம் சாப்பிடும் போது அவை நம் உடம்பில் தொற்று நோய்களை ஏற்படுத்தும். அதே சமயத்தில் எல்லா நேரங்களிலும் ஃப்ரிட்ஜின் சரியான சீதோசன நிலையை கண்டறிந்து கொண்டே இருக்கவும் முடியாது. 


நாம் பிரிட்ஜுக்குள் என்னென்ன உணவுகளை வைத்து உண்ண வேண்டும் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். காய் பழங்கள் என சமைக்கப்படாத உணவுகளை ஒருநாள் இரண்டு நாள் வரை பிரிட்ஜில் வைத்து அதனை சமைத்து உட்கொள்ளலாம். அதேசமயம், நீண்ட நாட்கள் பதப்படுத்தப்பட்ட மீன், இறைச்சி, சிக்கன், போன்ற அசைவ உணவுகளை  உண்ணக்கூடாது.


நீண்ட நாட்கள் அசைவ உணவுகளை ஃப்ரிட்ஜில் வைத்து உண்ணும் போது அதில் பாக்டீரியாக்கள் உருவாகிவிடும். அதனை நாம் சமைத்து சாப்பிடுவதால்  நம் உடலில் பலவித தொற்று நோய்களையும் ஏற்படுத்தும். அது உடல் நலனுக்கு தீங்காக அமையும் என வல்லுனர்கள் கூறுகின்றனர். 


சமைத்த அசைவ உணவுகளை ஃபிரிட்ஜில் வைத்து மறுநாள் மீண்டும் சூடேற்றி சாப்பிடும் போது அதன் தன்மை மாறி  விஷ உணவாகவும் மாற வாய்ப்புண்டு எனவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். இப்படி சாப்பிடுவதை அறவே தவிர்ப்பது உடல் நலனுக்கு நல்லது.




ஃபிரிட்ஜில் அசைவ உணவுகளை வைத்து சாப்பிடும் போது என்ன மாதிரியான நோய்த்தொற்று ஏற்படும் என்பது தெரியுமா? நீண்ட நாட்களாக அசைவ உணவுகளை பதப்படுத்தி  சாப்பிடும் போது யூ டி ஐ என்ற சிறுநீர் தொற்று ஏற்படுமாம். அதாவது இதனை யூரினரி இன்பெக்சன் எனக் கூறுவர். 


அது மட்டுமல்லாமல் இரைப்பை, ஈரல், சிறுநீரகம், மூளை ஆகியவற்றின் செயல்பாடுகளையும் இழக்கச் செய்யுமாம்.. இதனால் மக்கள் முடிந்த அளவு சமைக்கப்பட்ட அசைவ உணவுகள் மற்றும் மீந்து போன உணவுகளை ஃப்ரிட்ஜில் வைத்து  சாப்பிடுவதை தவிர்ப்பதே நல்லது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா

news

14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!

news

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை

news

தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!

news

400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!

news

தமிழகத்தில்‌.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!

news

விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!

news

குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!

news

மாற்றுத்திறனாளிகள் குறித்த சர்ச்சை பேச்சு...வருத்தம் தெரிவித்த அமைச்சர் துரைமுருகன்

அதிகம் பார்க்கும் செய்திகள்