அதிர்ச்சி செய்தி.. வாரணாசி தொகுதியில்.. பிரதமர் நரேந்திர மோடி பின்னடைவு.. முந்தியது காங்கிரஸ்!

Jun 04, 2024,09:45 AM IST

வாரணாசி:  பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசி தொகுதியில் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக வந்துள்ள செய்தி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாடு முழுவதும் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் மிகப் பெரிய அதிர்ச்சி செய்தி வாரணாசியிலிருந்து வந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இங்கு மீண்டும் போட்டியிட்டுள்ளார். வாக்குகள் எண்ணும் பணிகள் நடந்து வரும் நிலையில் தற்போது பிரதமர் மோடி 2வது இடத்திற்குத்  தள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய இணையதளத்திலேயே அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி பாஜகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.




முதல் சுற்று நிலவரப்படி, வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் முதலிடத்தில் இருக்கிறார். 2வது இடத்தில் பிரதமர் மோடியும், 3வது இடத்தில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அதீர் ஜமால் லாரியும் உள்ளனர்.  இந்த்த தொகுதியில் நோட்டாவுக்கு 158 வாக்குகள் முதல் சுற்றில் கிடைத்துள்ளது.


பிரதமர் மோடி பின்னடைவு என்பது மிகப் பெரிய அதிர்ச்சிச் செய்தியாக தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வந்து சேர்ந்துள்ளது. அதேபோல உத்தரப் பிரதேசத்திலும் பாதிக்குப் பாதி தொகுதியில் பாஜக பின்னடைவை சந்தித்து வருகிறது. வாரணாசி உ.பியில்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடினுக்கு மேலும் 2 மகன்கள் உள்ளனராம்.. யார் மூலமா தெரியுமா?.. பரபர தகவல்!

news

ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பினார் மகாவிஷ்ணு.. சைதாப்பேட்டை போலீஸ் கிடுக்கிப்பிடி விசாரணை!

news

ஸ்டிரைக் அறிவிப்பை மறு பரிசீலனை பண்ணுங்க.. தயாரிப்பாளர்களுக்கு நடிகர் சங்கம் கோரிக்கை

news

சின்னத்திரையில் பாலியல் அத்துமீறல்கள் கிடையாது.. எல்லாமே மியூச்சுவல்தான்.. நடிகையின் ஸ்டேட்மென்ட்!

news

28வது வருட திரையுலக வாழ்க்கையில் சிம்ரன்.. தி லாஸ்ட் ஒன்.. நாயகியாக மீண்டும் ரீ என்ட்ரி!

news

விதம் விதமான விநாயகர்கள்.. தமிழ்நாடு முழுவதும் 35,000 சிலைகள்.. விநாயகர் சதுர்த்தி கோலாகலம்

news

விளையாட்டுக் களத்திலிருந்து.. அனல் பறக்கும்.. தேர்தல் களத்திற்கு என்ட்ரி கொடுக்கும் வினேஷ் போகத்!

news

செப்டம்பர் 07 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

ரிஷப ராசிக்காரர்களே... திறமை வெளிப்படும் காலமிது

அதிகம் பார்க்கும் செய்திகள்