தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!

Apr 05, 2025,05:02 PM IST

கொழும்பு:  இந்தியாவில் உள்ள தமிழ் மக்களின் கோரிக்கைகளை இலங்கை பூர்த்தி செய்யும் என நம்புகிறேன் என்று பிரதமர் மோடி இலங்கையில் தெரிவித்துள்ளார்.


மூன்று நாள் பயணமாக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது.   அந்நாட்டு அதிபர் அநுரகுமாரா பிரதமரை வரவேற்று கௌரவித்தார். அணி வகுப்பு மரியாதையும் நடத்தப்பட்டது.  பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருதான மித்ர விபூஷணா விருது  வழங்கி இலங்கை அதிபர் அநுரகுமர திசநாயக கவுரவித்துள்ளார். தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்வுகளில்  பங்கேற்கிறார்.




அதன்பின்னர் பிரதமர் மோடி பேசுகையில், இந்தியா-இலங்கை இடையேயான உறவு நன்றாக உள்ளது. தீவிரவாத தாக்குதல், கொரோனா, பொருளாதார பிரச்சினையில் இலங்கை தவித்தபோது இந்தியா துணை  நின்றது.  இலங்கை அதிபராக திசநாயக பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவை தேர்வு செய்தார். இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக 10,000 வீடுகளை இந்தியா கட்டிக் கொடுத்துள்ளது. இலங்கையில் உள்ள 3 கோயில்களை சீரமைக்க இந்தியா உதவும். இந்தியாவில் உள்ள தமிழ் மக்களின் கோரிக்கைகளை இலங்கை பூர்த்தி செய்யும் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


இதனையடுத்து,  இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக பேசுகையில், இலங்கையின் தனித்துவ டிஜிட்டல் சேவைக்காக இந்தியா ரூ.300 கோடி நிதி தந்ததற்கு நன்றி. டிஜிட்டல் பொருளாதார மேம்பாட்டின் முக்கியத்துவத்தை இலங்கை உணர்ந்திருக்கிறது. இந்தியா-இலங்கைக்கு இடையிலான நட்பு நெருக்கமானது. இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் வகையில், எந்த செலும் இந்த மண்ணில் நடக்காது என்று இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார்.




இதனிடையே, இலங்கை பயணம் குறித்து பிரதமர் மோடி நேற்று தனது எக்ஸ் தளத்தில்  வெளியிட்ட பதிவில், இலங்கையில் தரையிரங்கி விட்டேன். விமானநிலைத்திற்கு வந்து என்னை வரவேற்ற அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களுக்கு நன்றி. இலங்கையில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சிகளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

news

மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!

news

தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!

news

நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்

news

தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!

news

தமிழக பாஜக தலைவர் நியமனம் எப்போது?.. 11 ஆம் தேதி அன்று தெரியும்!

news

எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்

news

தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!

news

அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்