1 முதல் 12ம் வகுப்பு வரை.. தமிழகத்தில் பாடப் புத்தகங்கள்.. கிடுகிடு விலை உயர்வு!

Aug 13, 2024,06:30 PM IST

சென்னை:   1 முதல் 12ம் வகுப்பு தனியார் பள்ளி மாணவர்களுக்கு விற்கப்படும்  அரசு பாடநூல் கழகங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 


ஆண்டுதோறும் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பாட புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் தயாரித்து  அச்சிட்டு வழங்குகிறது. பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு பாடநூல் கழகம் சார்பில் ஆண்டுக்கு 5 கோடி பாடப்புத்தகங்கள் அச்சிட்டு வழங்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இந்த புத்தகங்களை விலையில்லா புத்தகங்களாக தமிழக அரசு வழங்கி வருகிறது. அதே நேரம் தனியார் பள்ளி பயிலும் மாணவர்கள் இப்புத்தகங்களை விலை கொடுத்து தான் வாங்க வேண்டும். 


அது மட்டும் இன்றி அரசுபோட்டி தேர்வுகளுக்கு இந்த பாடப்புத்தகங்களின் அடிப்படையில் தான் கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றன. அதனால் இந்த புத்தகங்களை போட்டி தேர்வு எழுதும் மாணவர்களும் விலை கொடுத்து வாங்கும் நிலை தான் உள்ளது. இந்த நிலையில், பள்ளிப் பாட புத்தகங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக பாடநூல் கழக அறிவித்துள்ளது போட்டி தேர்வு எழுதுபவர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களிடையே  கவலையை ஏற்படுத்தியுள்ளது. காகித விலை உயர்வு, அச்சிடும் கட்டணம் உயர்வு காரணமாக வேறு வழி இன்றி கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது. 




வகுப்பு வாரியாக ஒவ்வொரு புத்தகத்தின் பழைய விலை புதிய விலை குறித்த அறிவிப்பு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி புத்தகம் ஒன்றுக்கு, ஒன்று முதல் நான்காம் வகுப்புகளுக்கான பாட புத்தகம் 30 முதல் 40 வரையும், ஐந்து முதல்  ஏழாம் வகுப்பு பாட புத்தகங்கள் ரூபாய் 30 முதல் 50 வரையும், எட்டாம் வகுப்பு பாட புத்தகங்கள் 40 முதல் 70 ரூபாய் வரையும், 9 முதல் 12ம் வகுப்பு புத்தகங்கள் 50 முதல் 80 வரையும், ஒரு சில புத்தகங்கள் 90 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளன. அதே போல் சிறுபான்மை மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, இந்தி உள்ளிட்ட புத்தகங்களின் விலை ரூபாய் 30 முதல் 50 வரை அதிகரித்துள்ளது.


அதன்படி மொத்த தொகுப்புகளாக வகுப்பு வாரியாக புத்தகங்களை பெறும் போது, ஒன்றாம் வகுப்பு பாட புத்தகங்களின் விலை 390 ரூபாயிலிருந்து 550 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் வகுப்பு பாட புத்தகங்களின் விலை 380 ரூபாயில் இருந்து 530 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் வகுப்பு பாட புத்தகங்களின் விலை 430 இல் இருந்து 620 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நான்காம் வகுப்பு பாட புத்தகங்களின் விலை 470 ரூபாயிலிருந்து 650 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஐந்தாம் வகுப்பு பாட புத்தகங்களின் விலை 510லிருந்து 710 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆறாம் வகுப்பு பாட புத்தகங்களின் விலை 790 ரூபாயிலிருந்து 1110 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏழாம் வகுப்பு பாட புத்தகங்களின் விலை 860 ரூபாயிலிருந்து 1200 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 


எட்டாம் வகுப்பு பாட புத்தகங்களின் விலை 690லிருந்து 1100 அதிகரித்து அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒன்பதாம் வகுப்பு பாடப் புத்தகங்களின் விலை 770 இல் இருந்து 1110 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பாட புத்தகங்களின் விலை 790 ரூபாயிலிருந்து 1130 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே போல் 11 மற்றும் 12ம் வகுப்பு பாட வாரியாக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த விலை உயர்வுக்கு தனியார் பள்ளிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது. இந்த விலை உயர்வால் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்க நேரிடும் என்றும் தனியார் பள்ளிகள் சங்கம் தெரிவித்துள்ளது. போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களும் பாடப் புத்தகங்கள் விலை உயர்வால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்