டெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. கலவரத்தால் கடந்த 2 வருடமாக பொசுங்கிப் போயிருக்கும் மணிப்பூரில், முதல்வர் பதவி வகித்து வந்த பைரன் சிங் மிக மிக நீண்ட தாமதத்திற்குப் பின்னர் பதவி விலகிய நிலையில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துள்ளது.
இனி மணிப்பூர் மாநில நிர்வாகத்தை ஆளுநர் கவனிப்பார். மணிப்பூரில் இனக் கலவரம் வெடித்து மாநிலமே பற்றி எரிந்து வருகிறது. கடந்த 2 வருடமாக கலவரம் ஓயவில்லை. பல நூறு பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மிகப் பெரிய அளவிலான பொருட் சேதத்தையும் அந்த மாநிலம் கண்டுள்ளது.
கலவரத்திற்குப் பொறுப்பேற்று முதல்வர் பைரன் சிங் விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன. ஆனாலும் பைரன் சிங் விலகவில்லை. இந்த நிலையில் பைரன் சிங் கலவரத்தைத் தூண்டி விட்டுள்ளதாக கூறி ஆடியோ ஆதாரங்களுடன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. இதுகுறித்து ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட்டும் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் பைரன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்தப் பின்னணியில் இன்று மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதுதொடர்பான உத்தரவை குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி பாஜக அரசுக்கு எதிராக சட்டசபையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரத் திட்டமிட்டிருந்த நிலையில் இன்று மாலை குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகியுள்ளது. ஆளுநர் வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் குடியரசுத் தலைர் ஆட்சி அமல்படுத்தப்படுவதாக குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
பைரன் சிங் விலகலைத் தொடர்ந்து புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்க பாஜக தலைமை முயன்றது. ஆனால் அடுத்த முதல்வர் யார் என்பதில் ஒருமித்த கருத்து ஏற்படாததால் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
மணிப்பூரில் குடியசுத் தலைவர் ஆட்சி அமல்.. பைரன் சிங் விலகிய சில நாட்களில் நடவடிக்கை!
அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்.. ராஜகண்ணப்பன் துறை.. பொன்முடிக்கு மாற்றம்
அதிமுக ஒன்றிணைந்தால் அனைவருக்கும் வாழ்வு... இல்லையேல் தாழ்வு... முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மறுஉருவம்தான் எடப்பாடி பழனிச்சாமி.. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
தவெக ஆண்டு விழா, பொதுக்குழு கூட்டத்தை.. பிரம்மாண்டமாக நடத்த.. விஜய் உத்தரவு.. ரெடியாகும் ரசிகர்கள்
கமல்ஹாசனுடன்.. நேற்று பி.கே.சேகர்பாபு.. இன்று உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு.. எம்.பி. சீட் இருக்கா?
அறிவாலயத்தை தொட்டுக்கூட பார்க்கமுடியாதவர் எப்படி செங்கலை பிடுங்க முடியும்?: அமைச்சர் சேகர்பாபு
Mood of the Nation Poll: திமுக கூட்டணி செல்வாக்கு கிடுகிடு உயர்வு.. 39 சீட்டுகளையும் அள்ளுமாம்!
Mood of the Nation Poll: 300ஐ தாண்டும் தேஜகூ.. காங்கிரஸின் கையில் நடுக்கம்.. தளதளக்கும் தாமரை!
{{comments.comment}}