தஞ்சாவூர்: அதிமுக பாஜக கூட்டணி முறிவு தொடர்ந்து குழப்பங்களை ஏற்படுத்தி வரும் நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ள கருத்து பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.
பிரேமலதா கூறுவதைப் பார்த்தால் சட்டுப் புட்டென்று மீண்டும் அதிமுக - பாஜக தலைவர்கள் கைகோர்த்துக் கொண்டு பழையபடி ஒன்னு மண்ணாக நடமாட ஆரம்பித்து விடுவார்களோ என்றும் எண்ண வைத்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பரபரப்பாகவும், சலசலப்பாகவும் இருந்து வந்த கூட்டணி அதிமுக - பாஜக கூட்டணி. அதிமுகவை தன்னுடன் வலுக்கட்டாயமாக பிடித்து வைத்திருந்தது பாஜக (இது உண்மைதான் என்பதை நேற்று எச். ராஜா அளித்த பேட்டியே நிரூபித்தது.. அதிமுக உடைந்து போய் விடாமல் பிடித்து வைத்து கை வலித்தது எங்களுக்குத்தான் தெரியும் என்று அவர் கூறியிருந்தார்). ஆனால் அண்ணாமலையின் அடுத்தடுத்த பேச்சுக்கள் அதிமுகவினரை உசுப்பி விட்டு விட்டது. இதனால் கூட்டணியிலிருந்து விலகுவதாக தீர்மானம் போட்டது அதிமுக.
ஆனால் இந்த தீர்மானம் போட்டதோடு சரி. அதன் பிறகு இரு தரப்பும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. சொல்லி வைத்தாற் போல இருவரும் கப்சிப்பென்று இருக்கிறார்கள். பாஜக தலைவர்களிடம் கேட்டால், மேலிடம் பதில் சொல்லும் என்று சொல்லி நழுவுகின்றன். அதிமுகவினர் இதுகுறித்துப் பேசவே மறுக்கிறார்கள். இரண்டு பேரும் பேசாம இருங்க என்று யாராவது சொல்லியிருக்கிறார்களா என்று தெரியவில்லை.
இந்த நிலையில் தஞ்சாவூரில் இன்று காவிரிப் பிரச்சினை தொடர்பாக தேமுதிக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதற்குத் தலைமை தாங்கினார் பிரேமலதா விஜயகாந்த். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது அதிமுக பாஜக விவகாரம் குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு பிரேமலதா பதிலளிக்கையில்,
அதிமுக பாஜக கூட்டணி முறிவு
அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி பிரிந்து இரண்டு நாட்கள் தான் ஆகிறது. நாம பொறுத்திருந்து பார்ப்போம். இதை ஏன் சொல்றேன்னா அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பனும் இல்லை. எனவே ஏன் கூட்டணியை விட்டு வந்தாங்க என்பதைப் பார்த்தால், இரண்டு கட்சிகளுக்கு இடையே பிரச்சினை இல்லை, இரண்டு தலைவர்களுக்குத்தான் பிரச்சினை நடந்திருக்கு. எனவே இது நிரந்தரமா இள்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 6, 7 மாதங்கள் உள்ளன. யார் தலைமையில் எந்தக் கூட்டணி அமையப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இப்போதே சொல்ல முடியாது. கொஞ்சம் டைம் ஆகும். நிச்சயமாக உரிய நேரத்தில் தேமுதிக நிலைப்பாடு என்ன என்பதை கேப்டன் உங்களிடம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றார் பிரேமலதா விஜயகாந்த்.
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
{{comments.comment}}