தேஜக கூட்டணியில் நாங்கள் இல்லை.. அதனால் அழைக்கவில்லை.. பிரேமலதா விஜயகாந்த்

Jul 24, 2023,04:49 PM IST
சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நாங்கள் இல்லை. எனவே எங்களுக்கு கூட்டணிக் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு அனுப்பப்படவில்லை என்று பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

சமீபத்தில் டெல்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழ்நாட்டிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகள் அதில் கலந்து கொள்ளவில்லை. இதனால் தேமுதிகவுக்கு பாஜக அழைப்பு விடுக்கவில்லையா என்ற பேச்சு எழுந்தது.



இதற்கு இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார் பிரேமலதா விஜயகாந்த். அவர் கூறுகையில், தேமுதிகவின் சார்பில் கட்சிக் கூட்டங்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப் போகிறோம். மாநாடு நடத்தப் போறோம். தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை தலைவர் முடிவு எடுத்து அறிவிப்பார். 

தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்திற்கு தேமுதிகவுக்கு அழைப்பு இல்லை என்று செய்தி வந்தது. தேமுதிகவைப் பொறுத்தவரை இந்த நிமிடம் வரை எந்தக் கூட்டணியிலும் இல்லை. தேசிய ஜநாயகக்கூ ட்டணியோ, அதிமுகவோ நாங்கள் எதிலும் இல்லை.  கூட்டணியிலேயே இல்லாதபோது எப்படி அழைப்பார்கள் என்பதை அனைவரும் யோசிக்க வேண்டும்.

வரும்காலத்தில் யாருடன் கூட்டணி என்பதை நிச்சயமாக வெகு விரைவில் கேப்டன் அறிவிப்பார். எனவே தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அழைப்பு இல்லை என்பது தவறு. கட்டணியில் இல்லை என்பதால் அழைக்கவில்லை. மற்றபடி எதுவும் இல்லை.  

நடக்கப் போவது பார்லிமென்ட் தேர்தல். நிச்சயமாக எங்களது நிலைப்பாடு குறித்து அறிவிப்போம்.  இLர்ுக முன்பு அம்மையார் ஜெயலலிதா இருந்தபோது 40 தொகுதயிலும் ஜெயித்தார். அதிமுக 38 இடங்களிலும், திமுக 38 தொகுதியிலும் ஜெயிச்சிருக்காங்க. எங்களது கேள்வியெல்லாம், ஜெயித்தார்கள், ஆனால் தமிழ்நாட்டுக்கு என்ன செய்துள்ளனர் என்பதை கேள்வியாக முன்வைக்கிறேன் என்றார் பிரேமலதா விஜயகாந்த்.

சமீபத்திய செய்திகள்

news

Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

அதிகம் பார்க்கும் செய்திகள்