ராஜ்யசபா சீட்கண்டிப்பாக எங்களுக்கு உண்டு.. அதிமுகவுடன் ஒப்பந்தமே போட்டிருக்கோம்..பிரேமலதா விஜயகாந்த்

Feb 12, 2025,01:39 PM IST

சென்னை: ராஜ்யசபா சீட் தொடர்பாக அதிமுகவுடன் ஒப்பந்தமே போடப்பட்டுள்ளது. எனவே தேமுதிக வேட்பாளர் யார் என்பதை விரைவில் முடிவு செய்வோம் என்று தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது தேமுதிக. அதற்கு முந்தைய சட்ட.சபைத் தேர்தலில் அதிமுக - பாஜக இடம் பெற்ற கூட்டணியில் தேமுதிக இருந்தது. கடந்த லோக்சபா தேர்தலின்போதே ராஜ்யசபா சீட்டையும் அதிமுகவிடம் கேட்டிருந்தது தேமுதிக. ஆனால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கியதா எந்த அறிவிப்பையும் அதிமுக அப்போது வெளியிடவில்லை.

இந்த நிலையில் வருகிற ஜூலை மாதம் தமிழ்நாட்டில் உள்ள 6 ராஜ்யசபா எம்.பிக்களின் பதவிக்காலம்  முடிவடைகிறது. இதில் அதிமுக சார்பில் 2 பேரைத் தேர்ந்தெடுக்க முடியும். திமுக சார்பில் 4 பேரை தேர்வு செய்ய முடியும். அதிமுக சார்பில் காலியாகும் 2 இடங்களிலும் அதிமுக போட்டியிடுமா அல்லது கூட்டணிக் கட்சியான தேமுதிகவுக்கு ஒரு சீட் தருமா என்ற கேள்வி எழுந்தது. காரணம், நீண்ட காலமாகவே கூட்டணிக் கட்சிகளிடம் ராஜ்யசபா சீட் கேட்டு வருகிறது தேமுதிக. ஆனால் யாருமே இதுவரை தந்தது கிடையாது.



இந்த நிலையில் வருகிற ராஜ்யசபா தேர்தலிலாவது தேமுதிகவுக்கு சீட் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதிமுகவுடன் இதுதொடர்பாக ஒப்பந்தம் போடப்பட்டு விட்டதாக தற்போது பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். இன்று  சென்னையில் செய்தியாளர்களிடையே அவர் பேசுகையில், ராஜ்யசபா சீட் தொடர்பாக அதிமுகவுடன் பேச்சு மட்டும் நடத்தவில்லை. ஒப்பந்தமே போடப்பட்டுள்ளது. எனவே தேமுதிக சார்பில் யார் போட்டியிடுவது என்பதை விரைவில் முடிவு செய்வோம் என்றார் பிரேமலதா விஜயகாந்த்.

இதனால் ராஜ்யசபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவும் போட்டியிடும் என்று தெரிகிறது. ஆனால் அதிமுக தரப்பு இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. அவர்கள் அறிவிக்காமல், பிரேமலதா விஜயகாந்த்தே இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதால் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.

ஒரு வேளை ராஜ்யசபா தேர்தலில் தேமுதிக போட்டியிட்டால் வேட்பாளராக யார் போட்டியிடுவார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. விஜய பிரபாகரன் ஏற்கனவே விருதுநகர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்றுள்ளார். எனவே அவருக்கு மீண்டும் ராஜ்யசபா தேர்தலில் சீட் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், தனது தம்பி சுதீஷுக்கு சீட் தருவாரா பிரேமலதா விஜயகாந்த் என்ற எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?

news

என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 18, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

ஹஜ் ஒதுக்கீடு ரத்து...பிரதமர் தலையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

அதிகம் பார்க்கும் செய்திகள்