கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராயம் குடித்து உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கிறார்கள் என்றால், கள்ளச்சாராயம் குடிப்பவர்களை ஊக்கப்படுத்துகிறதா இந்த அரசு என்ற கேள்வி எழுகிறது. அப்போ நாமும் கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் அரசு ரூ.10 லட்சம் தரும் என்ற தவறான எண்ணம் மக்கள் மனதில் வந்திவிடும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கள்ளச்சாராயம் குடித்து உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் பிரேமலதா விஜயகாந்த். அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், போதை இல்லாத தமிழகம் தான் என் லட்சியம் என்று சொன்னாரு முதல்வர். இதுக்கு என்ன தீர்வு செய்தார். ஏற்கனவே இது மாதிரி கள்ளச்சாராயம் சாப்பிட்டு பல பேர் உயிரிழந்திருந்த சம்பவம் நடந்தது. அப்பயும் நம்ம எல்லாரும் வந்தோம். இதே நிகழ்வு தான் நடந்தது.
அப்ப என்ன சொன்னாரு முதல்வர் உடனடியாக கள்ளச்சாராயம் தமிழகத்தில் எங்குமே இல்லாத அளவிற்கு கட்டாயம் இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் என்று சொன்னார். இந்த நிமிஷம் வரைக்கும் 38 பேர் உயிர் போயிருக்கு. பத்து பதினைந்து பேர் உயிர் ஊசல் ஆடிட்டு இருக்கிறது. இந்த அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது. மக்கள் கேள்வியாக நான் கேட்கிறேன்.
டாஸ்மார்க் இல்லா தமிழகத்தை உருவாக்கணும். நாங்களும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். எல்லாமே இங்கே கண் துடைப்பு நாடகமா தான் இருக்கு. எதுக்கெடுத்தாலும் வரும் முதல்வர் ஏன் இப்ப வரைக்கும் வரல. 38 உயிர் போயிருக்கு. எத்தனை குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கு. மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய முதல்வர் ஏன் வரல. மக்கள் கேள்வியை நான் எழுப்புகிறேன். இன்னைக்கு வெறும் தேர்தலை மையமாகக் கொண்டு ஆட்சி நடத்துகிறார்கள்.
தேர்தலினால் அரசியல் மட்டும் தான் நடக்குது ஒழிய மக்களுக்கு பயனளிக்கக்கூடிய எந்தவித திட்டங்களும், முன்னேற்றங்களும் தமிழ்நாட்டில் நடந்ததாக இல்லை. மக்களாகிய நீங்கள் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். ஏற்கனவே ஒரு கோடி பேருக்கு வேலை இல்லை. கொடுத்த வாக்குறுதியில் எந்த வாக்குறுதிகளையும் அரசு நிறைவேற்றவில்லை.
ஓட்டுக்கு காசு கொடுத்து ஊழல் பண்றது, மக்களை ஏமாற்றுவது, பொய் வாக்குறுதிகளை கொடுப்பது எல்லாம் அடுத்த தேர்தலை நோக்கி தான் இந்த கட்சிகள் போகிறது என்று மன வருத்தத்தோடு கூறுகிறேன்.அதிகாரிகளை மாற்றிவிட்டால் போன உயிர் வந்துவிடுமா? ஒரு குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் அறிவிக்கிறாரு அப்ப கள்ளச்சாராயத்திற்கு இந்த அரசு ஊக்கப்படுத்துகிறதா? ஒரு கள்ளச்சராயத்தை தடுக்க வேண்டிய முதல்வர் கள்ளச்சாராயத்திற்காக குடித்து இறந்தவர்களுக்கு பத்து லட்சம் நிவாரணம் தருவது தப்பு. நம்மளும் கள்ளச்சாராயம் குடித்து செத்தா நம்ம குடும்பத்துக்கு 10 லட்சம் வரும் என்று அனைரும் தப்பா புரிந்து கொள்வார்கள். இது தப்பான முன் உதாரணம்.
அதற்கு பதில் அரசு உடனடியாக டாஸ்மார்க் அளவை குறைக்கணும். லஞ்சம் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கணும். கள்ளச்சாராய விற்பனையை ஒழிகக வேண்டும். இன்றைக்கு அதிகாரிகளை மாற்றுவதும், 10 லட்சம் கொடுப்பதும் வெறும் கண்துடைப்புதான். இங்கு எத்தனை பேர் உயிர் போய் இருக்கு, அதற்கு என்ன பதில். முன்னர் ஓட்டுக்கு ரூ.2000 கொடுத்தாங்க. இந்த நிகழ்வால் இன்னொரு 2000 சேர்த்து கொடுப்பாங்களே ஒழிய எதிர்கால தமிழ்நாட்டிற்கு எதுவும் கிடையாது.
மிகவும் மன வருத்தத்தோடு சொல்கிறேன். இன்னைக்கு இவ்வளவு போலீஸ் போடப்பட்டு இருக்கு. இந்த போலீஸ்களை எல்லாம் விட்டு கண்காணித்தாலே கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியும். அரசும் காவல்துறையும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கு சப்போர்ட்டா இருக்கு. இது கண்டிப்பா கண்டிக்கக் கூடிய விஷயம் என்று கூறியுள்ளார்.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}