விஜயவாடா: ஐபேக் நிறுவனரும், பிரபல அரசியல் உத்தி வகுப்பாளருமான பிரஷாந்த் கிஷோர் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. காரணம், ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஒய்.எஸ்.ஆர். ஜெகன் மோகன் ரெட்டியின், உத்தி வகுப்பாளராக பிரஷாந்த் கிஷோர் நிறுவனம் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில்தான் தெலங்கானா மாநில சட்டசபைக்குத் தேர்தல் நடந்தது. இன்னும் நான்கு மாதங்களில் ஆந்திர மாநில சட்டசபைக்கு தேர்தல் வரவுள்ளது.
கடந்த 2019ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றினார் பிரஷாந்த் கிஷோர். இதில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று முதல்வரானார் ஜெகன் மோகன் ரெட்டி. சந்திரபாபு நாயுடு பெரும் தோல்வியைத் தழுவினார்.
இந்த நிலையில் திடீரென நேற்று தனி விமானம் மூலம் விஜயவாடாவுக்குச் சென்றார் பிரஷாந்த் கிஷோர். அவருடன் சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷும், மேலும் 3 பேரும் உடன் சென்றனர். அதில் ஒருவர் பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்திலிருந்து விலகி ராபின் சர்மா உருவாக்கிய ஷோடைம் கன்சல்டிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர். இந்த ஷோடைம் நிறுவனம்தான் தெலுங்கு தேசம் கட்சிக்காக பணியாற்றி வருகிறது.
சந்திரபாபு நாயுடுவை பிரஷாந்த் கிஷோர் ஏன் சந்தித்தார் என்று தெரியவில்லை. இந்த நிலையில் ஆந்திர மாநில ஐபேக் ஒரு டிவீட் போட்டுள்ளது. அதில், ஒய்எஸ்ஆர்காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி 2024ம் ஆண்டு தேர்தலில் மாபெரும் வெற்றியை ஈட்டும். அதை உறுதி செய்வதில் ஐபேக் உறுதியாக உள்ளது என்று கூறியுள்ளது.
பிரஷாந்த் கிஷோர் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு பல்வேறு கேள்விகளையும், எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பல முக்கியமான தேர்தல் முடிவுகளை நிர்ணயித்ததில் பிரஷாந்த் கிஷோருக்கு முக்கியப் பங்கு உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக 2014 தேர்தலில் வெற்றி பெற பிரஷாந்த் கிஷோர் வகுத்துக் கொடுத்த திட்டங்கள்தான் காரணம். அதேபோல நிதீஷ் குமாருக்கும் ஆலோசகராக இருந்துள்ளார் கிஷோர். மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜிக்காக பணியாற்றியுள்ளார்.
தமிழ்நாட்டில் 10 வருடமாக இருந்து வந்த அதிமுக ஆட்சியை வீழ்த்தி, திமுக மிகப் பெரிய வெற்றியைப் பெறவும் அவர் உத்திகள் வகுத்துக் கொடுத்து தீவிரமாக செயல்பட்டார். இதன் மூலம் மு.க.ஸ்டாலின் முதல் முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்தார்.
மேற்கு வங்காள சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு ஜன் சுராஜ் என்ற அமைப்பை உருவாக்கினார். பீகாரில் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். தனது அமைப்பை கட்சியாக மாற்றவும் திட்டமிட்டுள்ளார். இருப்பினும் தான் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவில் அவர் இருக்கிறார்.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}