சென்னை : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதலாம் ஆண்டு விழாவில் பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கலந்து கொண்டுள்ளது தமிழக அரசியல் தலைவர்களை மட்டுமல்ல தேசிய அரசியல் கட்சி தலைவர்களையும் ஜெர்க் ஆக வைத்துள்ளது. இது என்ன கணக்குன்னு புரியாமல் அனைவரும் குழம்பி போய் உள்ளனர்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா . இரண்டாம் ஆண்டில் கட்சி அடியெடுத்து வைப்பதை கொண்டாடும் வகையில் விஜய் கட்சியின் ஆண்டு விழா மகாபலிபுரத்தில் இன்று நடந்து வருகிறது. இதில் சிறப்பு விருந்தினராக அரசியல் வியூகர் பிரசாந்த் கிஷோர் கலந்து கொண்டுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. காரணம், பிரசாந்த் கிஷோர் முதல் முறையாக அரசியல் விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளது தான்.
பிரசாந்த் கிஷோரை தெரியாதவர்கள் இந்திய அரசியலிலேயே இருக்க முடியாது. தேசிய கட்சிகள் முதல் திராவிட கட்சிகள் வரை பலருக்கும் அரசியல் ஆலோசகராகவும், தேர்தல் வியூக ஸ்பெஷலிஸ்டாக இருந்தவர் பிரசாந்த் கிஷோர். நரேந்திர மோடி முதல் முறையாக பிரதமரான 2014ம் ஆண்டு தேர்தலில் அவருக்கு ஆலோசகராக இருந்தவர் பிரஷாந்த் கிஷோர்.
இந்திய அரசியலில் மிகப் பெரிய மாற்றங்கள் சமீப காலங்களில் ஏற்பட காரணமாக இருந்தவர் என்று கூட இவரை சொல்லலாம். இருந்தாலும் கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக படுதோல்வி அடையும், காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்ற இவரது கணிப்பு தவறானது. அனைத்து கணிப்புக்களையும் பொய்யாக்கி பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சியை பிடித்துள்ளது.
பாஜக.,வின் இந்த வெற்றியை எதிர்பாராத பிரசாந்த் கிஷோர், வெளிப்படையாகவே தன்னுடைய கணிப்புக்கள் தவறானதை ஒப்புக் கொண்டு. இனி அரசியல் வியூகங்கள் அமைப்பதை கை விட போவதாக ஓப்பனாக அறிவித்தார். அதற்கு பிறகு இவர் எங்கிருக்கிறார் என தெரியாத அளவிற்கு சத்தம் காட்டாமல் இருந்து வந்தார். ஆனால் பீகாரில் தனக்கென, ஜன் சுராஜ் என்ற பெயரில் கட்சி ஒன்றை நடத்தி வருகிறார். பெரிய அரசியல் கட்சிகளும் இவர் தற்போது பெரிதாக கண்டு கொள்வதில்லை.
மிகப் பெரிய கட்சிகளுக்காக அரசியல் வியூகங்கள் அமைத்துக் கொடுத்த போது கூட பின்னணியில் இருந்து மட்டும் தான் பிரசாந்த் கிஷோர் செயல்பட்டுள்ளார். எந்த ஒரு கட்சியின் விழாவிலோ, பிரச்சார கூட்டத்திலோ, மாநாட்டிலோ இவர் கலந்து கொண்டது கிடையாது. ஆனால் இன்று முதல் முறையாக விஜய்யின் கட்சி ஆண்டு விழாவில் கலந்து கொண்டுள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. எதற்காக இவர் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளார்? பீகாரில் அரசியல் கட்சி நடத்தும் தலைவர் என்ற முறையில் கலந்த கொண்டுள்ளாரா? அல்லது வேறு ஏதாவது கணக்கு இருக்கா என புரியாமல் பலரும் குழம்பி வருகிறார்கள்.
விஜய்யின் அழைப்பை ஏற்று அவரத கட்சி விழாவிற்காக வந்திருப்பதால் திராவிட கட்சிகளுக்கு எதிராக விஜய்க்கு அரசியல் வியூகங்களை பிரசாந்த் கிஷோர் வகுத்து கொடுப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எந்த அரசியல் கட்சியின் பெயரையும் குறிப்பிடாமல் #GetOut என எழுதப்பட்டுள்ள போர்டின் மீது விஜய் கையெழுத்திட்டு இந்த விழாவை துவக்கி உள்ளதால் பாஜக, திமுக.,விற்கு எதிராக விஜய்-பிரஷாந்த் கிஷோர் கைகோர்க்க வாய்ப்புள்ளதாகவம் சொல்லப்படுகிறது. ஆனால் அந்த பேனரில் கையெழுத்திட பிரஷாந்த் கிஷோர் மறுத்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திமுக அரசை ஏற்கனவே வெளிப்படையாக விமர்சித்த விஜய், பாஜக.,வின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தையும் சமீபத்தில் விமர்சித்திருந்தார். அதே சமயம் அதிமுக பற்றி இதுவரை அவர் எந்த கருத்தும் சொல்லவில்லை. மாறாக எம்ஜிஆர்., ஜெயலலிதா போல் சினிமாவிற்கு பிறகு அரசியலிலும் விஜய் வெற்றி கொடு நாட்டுவார் என்று பலரும் கூறப்பட்டு வருவதால் விஜய்-அதிமுக கூட்டணி அமையவும் வாய்ப்புள்ளதாகவும், அதற்கு பிரசாந்த் கிஷோர் காரணமாக இருக்கவும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் பிரசாந்த் கிஷோரின் தமிழக வருகை தமிழக அரசியல் களத்தில் விறுவிறுப்பை கூட்டி உள்ளது. இனி வரும் நாட்களில் அடுத்தடுத்த திருப்பங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி
விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு
யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!
பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா
என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!
இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!
தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?
அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!
தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்
{{comments.comment}}