சென்னை: தமிழகம் முழுவதிலும் உள்ள +1 மற்றும் +2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் இன்று தொடங்கின.
தமிழ்நாட்டில் 2024 ஆம் ஆண்டிற்கான 10, பிளஸ் 1, மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொது தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதத்திற்குள் நடந்து முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரையும், பிளஸ் 1 தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்கி மார்ச் 25ஆம் தேதி வரையும், பத்தாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரையும் நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளை 10 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதவுள்ளனர்.
இந்நிலையில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று (பிப்ரவரி 12ஆம் தேதி) தொடங்கி வரும் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் நடைபெற்று வருகிறது. அதன்படி பாட வாரியாக காலை மற்றும் மாலை வேலைகளில் செய்முறை தேர்வுகள் நடத்தப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை அரசு, மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளிலும் செய்யப்பட்டுள்ளன. அரசு தேர்வு துறை வழிகாட்டுதலின் படி எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் செய்முறை தேர்வுகளை நடத்த வேண்டும் என்று பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஒரு அறைக்கு 25 முதல் 30 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 17ம் தேதி வரை செய்முறைத் தேர்வுகளை நடத்தி, தேர்வுக்கான பட்டியலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், பிப்., 19ம் தேதிக்குள் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி
விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு
யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!
பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா
என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!
இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!
தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?
அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!
தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்
{{comments.comment}}