விஜய் எந்த தொகுதியில் நின்னாலும் அவரை எதிர்த்து நானும் நிற்க தயார்: பவர் ஸ்டார் சீனீவாசன்!

Mar 31, 2025,06:02 PM IST
சென்னை: என்னுடைய அருமை தம்பி விஜய் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து நானும் நிற்க தயாராக இருக்கிறேன். அவர் தாயாரா என்று கேட்டு சொல்லுங்கள் என்று நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஜோசப் விஜய் அவர்களே. நான் உங்களை ரொம்ப மதிக்கிறேன். உங்களை கூட பிறந்த தம்பி மாதிரி தான் ஆடியோ வெளியிட்டு நிகழ்ச்சியில் சந்தித்தேன்.  நாம ரெண்டு பேரும் அரை மணி நேரம் தனியாக பேசினோம். அப்ப நீங்க சொன்னீங்க எனக்கு உலகம் முழுவதும் பான்ஸ் இருக்காங்க. ஆனா எங்க வீட்ல என் பையன் உங்களோட ஃபேன் என்று சந்தோஷப்பட்டீங்க. நானும் ஹாப்பியா இருந்தேன்.

ரொம்ப அமைதியா இருந்தவர். திடீர்னு பார்த்தால் மேடையில் பயங்கரமான டயலாக் வசனம் எல்லாம் பேசுகிறார். களத்திற்கு வாங்க. அப்ப தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்க முடியும். வீரபாண்டிய கட்டபொம்மன் மாதிரி டயலாக் பேசுகிறார். அங்கிட்டு போறாரு இங்கிட்டு வாராரு. கூட்டம் எனக்கு கூட தான் கூடுது. கூட்டத்தை வச்சு எதையும் கணிக்க முடியாது. எனக்கும் ரசிகர்கள் ஏகப்பட்ட பேர் இருந்தாங்க. நானும் கட்சி ஆரம்பிக்கணும் என்று தீவிரமாக முயற்சி எடுத்தேன். கடைசியில என்ன சூழ்நிலையோ தள்ளிப் போயிடுச்சு. அதனால், என்னுடைய அருமை தம்பி விஜய் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து நானும் நிற்க தயாராக இருக்கிறேன்.





 அவர் தாயாரா என்று கேட்டு சொல்லுங்கள். கட்சி ஆரம்பிக்க மாட்டேன். பெரிய கட்சி கூப்பிட்டால் போவேன். இல்லை என்றால் சுயேட்சையாகவும் நிற்கத் தயார். திமுகவில் சேர வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக சேருவேன். திமுகவை எதிரி என்று சொல்வது எல்லாம் டயலாக். எதிரியும் கிடையாது, நண்பனும் கிடையாது. இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை. நாளைக்கு கூட்டணிக்கு வாங்கன போகப்போறாரு. அவர் மக்களுக்கு என்ன செய்யப் போகிறார். அவரு கொள்கை என்ன என்று சொல்ல வேண்டும். அதை சொல்லாமல் நான் அவருக்கு எதிரி என்று சொல்லக்கூடாது. 



இதெல்லாம் தப்பு. அவர்கள் எல்லாம் 50 வருடம் அனுபவம் உள்ளவர்கள். அவர்களுடைய அனுபவம் இவருடைய வயது. அதனால், எடுத்தோம் கவிழ்த்தோம் என மேடையில்  பேசக்கூடாது.  முதல்வரை விஜய் பேசுவதை பார்த்து வேதனை பட்டேன். என்னடா ஒரு நடிகராக இருந்து இப்படி எல்லாம் பேசலாமா. முதலில் அவர் நடிகர்கள், டெக்னீசியனுக்கு உதவி பண்ணட்டும். அதை விட்டுட்டு மக்களுக்கு அதைச் செய்கிறேன் என்று சொல்கிறார். களத்தில் இறங்கி அவர் வேலை பார்க்க வேண்டும். விஜய் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு கொடுப்பார்கள். எனது ரசிகர்கள் எனக்கு ஆதரவு கொடுப்பார்கள். கூட்டத்தை பார்த்து எதையும் கணிக்க முடியாது. அரசியல் வேறு வாக்காளர்கள் வேறு. எனக்கும் விஜய்க்கு மேல கூட்டம் இருந்தது. விஜய் களத்தில் நின்று ஜெயிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வக்பு வாரிய சட்ட மசோதா நாளை தாக்கல்.. எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி எம்.பிக்கள் முடிவு

news

தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக ..2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்..!

news

வழக்கத்தைவிட.. ஏப்ரல், ஜூனில் வெப்பம் அதிகரிக்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!

news

Emburan Movie: பெரியாறு அணை குறித்து அவதூறு கருத்துகளை நீக்குக.. பண்ருட்டி வேல்முருகன்..!

news

Madurai Chithirai Thiruvizha 2025: மீனாட்சி அம்மன் கோவிலில்..ஏப்ரல் 29ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..

news

அருவறுப்பான ஆண்களே அழிஞ்சு நாசமா போங்க.. பாடகி சின்மயி ஆவேசம்!

news

கும்பகோணம் வெற்றிலைக்கும் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு!

news

டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு.. ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அரசு உத்தரவு..!

news

தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்.. அமித்ஷா கூறியது நகைச்சுவை:விசிக தலைவர் திருமாவளவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்