சென்னை: பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் இன்று முதல் தொடங்கியுள்ளது. வீடு வீடாக சென்று டோக்கன் வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச பொங்கல் தொகுப்புகளுடன்,ரொக்க தொகையும் தமிழக அரசு ஒவொரு வருடமும் வழங்கி வருகிறது. அந்த வரிசையில் இந்த வருடமும் பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, அடங்கிய பொங்கல் தொகுப்பை வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த வருடம் ரொக்கத் தொகை வழங்கப்படவில்லை. இது மக்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது.
பொங்கல் தொகுப்பு 2.20 கோடி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகிய பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். அத்துடன் இலவச வேட்டி சேலையும் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் 2கோடியே 20 லட்சத்து 94,585 ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இந்த செலவினங்களுக்காக அரசு ரூ.249.76 கோடி நிதி ஒதுக்கீட்டு செய்யப்படும் .மேலும் இதற்கான டோக்கன் ஜனவரி 3ஆம் தேதி வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தது. இதற்கான பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகைகாகான பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகம் இன்று முதல் தொடங்கியுள்ளது.
அதாவது ஜனவரி 3ஆம் தேதி முதல் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக டோக்கன் விநியோகம் செய்ய உள்ளனர். இதில் பரிசுத் தொகுப்பை பெறுவதற்கான தேதி,நேரம் குறித்த விபரங்கள் இடம்பெற்றிருக்கும். தினமும் காலையில் 100 பேருக்கும் பிற்பகலில் 100 பேருக்கும் டோக்கன் விநியோகம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதேசமயம் இந்த டோக்கன்களில் குறிப்பிட்டுள்ள தேதிகளில் சம்மந்தப்பட்ட ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என கூட்டுறவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொங்கல் பரிசு தொகுப்பை விநியோகிக்க அட்டவணை விவரத்தை காவல்துறைக்கு முன் கூட்டியே தெரிவித்து அனைத்து ரேஷன் கடைகளும் உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பொங்கல் தொகுப்பு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். எவ்வித புகார்மின்றி பரிசுத் தொகை விநியோகம் செய்ய வேண்டும் என அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு அரசாணை வெளியிட்டப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ்
இதற்கிடையே, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பென்ஷன்தாரர்கள், குடும்ப பென்ஷன்தாரர்கள் ஆகியோருக்கு பொங்கல் போனஸ் வழங்க நிதி ஒதுக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
2025ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதியன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 ரொக்க பணம் வழங்கப்படும். ஆனால் இந்த முறை ஃபெசல் புயல் நிவாரணம், மகளிர் உரிமை தொகை வழங்குதல் உள்ளிட்ட காரணங்களால் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படாது என தமிழக அரசு சார்பில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பென்ஷன்தாரர்கள், குடும்ப பென்ஷன்தாரர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்குவதற்காக ரூ.163.81 கோடி தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சி மற்றும் டி பிரிவை சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3000 என்ற உச்சவரம்பிற்குட்பட்டு போனஸ் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொப்பூதியம், சிறப்பு கால ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் 2023-2024ம் நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்து சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் பெறும் முழு நேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள் ஆகியோருக்கு ரூ.1000 சிறப்பு போனஸ் வழங்கப்பட உள்ளது.
சி மற்றும் டி பிரிவை சேர்ந்த பென்ஷன்தாரர்கள், குடும்ப பென்ஷன்தாரர்கள், முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் அனைத்து வகையான தனி பென்ஷன்தாரர்கள் ஆகியோருக்கு ரூ.500 பொங்கல் போனசாக வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சிந்து வெளிப் புதிர்.. விடை கண்டுபிடிப்போருக்கு.. 1 மில்லியன் டாலர் பரிசு.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!
இரவு சாப்பிட்ட பிறகு ஜீரண கோளாறு ஏற்படாமல் இருக்கணுமா?...இதை டிரை பண்ணி பாருங்க
அமெரிக்காவில் வேகமாக பரவும் இன்ஃபுளுயன்சா வைரஸ்.. வழக்கமாக குளிர் காலத்தில் பரவுவதுதானாம்!
சீனாவில் பரவும் வைரஸ்... இந்தியாவிற்கு பாதிப்பு வருமா?... மத்திய சுகாதாரத்துறை விளக்கம் இதுதான்!
டெல்லிக்கு மஞ்சள் அலர்ட்.. படுத்தி எடுக்கும் அடர் பனிமூட்டம்.. 400க்கும் அதிகமான விமான சேவை பாதிப்பு
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - ஜனவரி 05, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
பொங்கல் பண்டிகைக்கு 6 நாட்கள் அரசு விடுமுறை... ஜனவரி 17ம் தேதி லீவு.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு
ஃபெங்கல் புயல் தீவிர பேரிடர்.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு.. கெஜட்டிலும் அறிவிக்கை வெளியானது
சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலி: 4 லட்சம் நிவாரணம் அறிவித்த தமிழக அரசு
{{comments.comment}}