சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 13 ஆம் தேதி வரை அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. சென்னை சைதாப்பேட்டையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இந்த வருடம் ரொக்கத் தொகை வழங்கப்படாமல்,ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய பொங்கல் தொகுப்பை தமிழ்நாடு அரசு வழங்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக 2. 20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ஆகிய பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். அத்துடன் இலவச வேட்டி சேலையும் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதன் மூலம் 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இந்த செலவினங்களுக்காக 249.76 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 3ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் இன்று முதல் பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இவருடன் மேயர் பிரியா, அமைச்சர்கள், எம்பிக்கள், மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று முதல் பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்யப்படுகிறது. இன்று தொடங்கப்படும் பொங்கல் தொகுப்பு விநியோகம் வரும் 13ஆம் தேதி வரை மக்கள் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு
பாமகவை பிளவுபடுத்துவாரா டாக்டர் அன்புமணி.. ராமதாஸின் திட்டம் என்ன?.. பரபரப்பில் தமிழக அரசியல்
தமிழகத்திற்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையால்.. பாஜக அரசியல் சூழல் எழுச்சி பெறுமா..?
மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முன்னோடி திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
Flower Market Price: பங்குனி உத்திரம்... கோயம்பேட்டில் பூக்களின் விலை உயர்வு
சிங்கப்பூர் அரசு விழாவில்.. வாழ்வியல் இலக்கியப் பொழில் சிறப்பு உரையாளராக.. முனைவர் மு. ஜோதிலட்சுமி
பனையூரில் நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அஜித் படத்திற்கு.. வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
அதிரடி காட்டி வரும் தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.2160 உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
{{comments.comment}}