ராகுல் காந்தியின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட தேர்தல் பறக்கும் படையினர்

Apr 15, 2024,01:45 PM IST

சென்னை : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பயணம் செய்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி, இந்த முறையும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார். இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ம் தேதி நடக்கும் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவில் கேரளா மாநிலத்திற்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ராகுல் காந்தி, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 


ஏப்ரல் 15ம் தேதி துவங்கி, ஏப்ரல் 22ம் தேதி வரை தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார். இதற்காக டில்லியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் இன்று காலை தமிழகம் வந்தார். அப்போது அவர் வந்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டுள்ளனர். கேரளாவிற்கு பிரச்சாரத்திற்கு வருபவர் எதற்காக தமிழகம் வர வேண்டும். நேரடியாக கேரளாவிற்கே சென்றிருக்கலாமே என அவரிடம் கேள்வி எழுப்பி உள்ளனர். 




ஏற்கனவே தமிழகத்தில் அதிமுக, திமுக என பாரபட்சம் இன்றி பல விஐபி.,க்கள் செல்லும் வாகனங்களையும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டு வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை நடத்தப்பட்ட வாகன சோதனையில் இதுவரை ரூ.4650 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இன்று ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரும் சோதனை செய்யப்பட்டுள்ளது. 


இன்று ராகுல் மற்றும் பிரதமர் மோடி இருவருமே கேரளாவின் பல பகுதிகளில் நடக்கும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பங்கேற்க உள்ளனர். இருவரும் ஒரே நேரத்தில் கேரளாவிற்கு வருவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் சோதனை செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்