ஆம்ஸ்ட்ராங் கொலை.. அடுத்தடுத்து சிக்கும் அரசியல் பிரமுகர்கள்.. அனைத்துக் கட்சிக் கொலையா?

Jul 18, 2024,10:34 AM IST

சென்னை: அனைத்துக் கட்சிக் கூட்டம் கேள்விப்பட்டிருப்போம்.. ஆனால் "அனைத்துக் கட்சிக் கொலை" என்று சொல்லக் கூடிய வகையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் பல்வேறு கட்சியினரும் தொடர்பு கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.


திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்தக் கொலை வழக்கில் தொடர்பு இருப்பது இதுவரை புலனாகியுள்ளது.


3 கட்சிப் பிரமுகர்கள்




திமுகவைச் சேர்ந்த 2 பேர் (வழக்கறிஞர் அருள் மற்றும் அவரது சகோதரி மகன் சதீஷ்), அதிமுகவைச் சேர்ந்த ஒருவர் (மறைந்த தாதா தோட்டம் சேகரின் மனைவி மலர்க்கொடி) இதுவரை இந்தக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர பாஜகவைச் சேர்ந்த பிரமுகர் அஞ்சலை என்பவரும் முக்கியக் குற்றவாளியாக இந்த வழக்கில் தேடப்பட்டு வருகிறார். அவர் தற்போது தலைமறைவாகி விட்டார். இவர் ஏற்கனவே கொலை செய்யப்பட்டு விட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் காதலி ஆவார்.


ஆற்காடு சுரேஷ் கொலைக்குப் பழி வாங்குவதற்காகவே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது மலர்க்கொடியின் கைது இந்தக் கொலைக்கு வேறு சில நோக்கங்களும் இருக்குமா என்ற சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. அடுத்தடுத்து நடந்து வரும் கைது சம்பவங்கள் இந்த கொலை வழக்கை மேலும் விரிவுபடுத்த ஆரம்பித்துள்ளது.


ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுக, அதிமுக, பாஜக என தொடர்புகள் நீண்டு கொண்டே வருவது அதிர்ச்சியும், வியப்பும் அளிப்பதாக உள்ளது. ஒரு முக்கியமான கட்சியின் தலைவரை, வட தமிழ்நாட்டின் முக்கியமான தலித் தலைவரை  இத்தனை பேர் சேர்ந்து ஸ்கெட்ச் போட்டுக் கொன்றிருப்பது மிகச் சாதாரணமானதாக தெரியவில்லை. மிக மிக தெளிவாக திட்டம் போட்டு நிறுத்தி நிதானமாக இதை செய்துள்ளனர் என்று தெரிகிறது.


என்ன மோட்டிவ்?




இத்தனைக் கட்சிக்கார்கள் இணைந்திருக்கிறார்கள் என்றால் ஆம்ஸ்ட்ராங்கைக் கொலை செய்ய அத்தனை ஸ்டிராங்கான மோட்டிவ் என்ன என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது. ஒரு நெட்வொர்க் போல இவர்கள் செயல்பட்டுள்ளனர். கட்சி பாகுபாடு தாண்டி, அனைவரும் இணைந்துள்ளனர். அதாவது பலருக்கும் ஒரே எதிரியாக ஆம்ஸ்ட்ராங் மாறியுள்ளார். இதனால்தான் பல கட்சிக்காரர்களும் கை கோர்த்து ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துள்ளனர்.


ஆம்ஸ்ட்ராங்கின் நடமாட்டத்தை ஒரு கும்பல் பல நாட்களாக கண்காணித்து வந்துள்ளது. ஒரு கும்பல் கொலையாளிகளுக்கு ஆயுத சப்ளை செய்துள்ளது. இன்னொரு கும்பல் கொலையாளிகள் தப்பிச் செல்வதற்குத் தேவையான வேலைகளைச் செய்துள்ளது. மொத்தப் பேருக்கும் சேர்த்து ஒருவருக்கு பணம் போடப்பட்டுள்ளது. அந்தப் பணத்தை மலர்க்கொடி அக்கவுண்ட்டுக்கு அனுப்பி வைத்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ரூ. 50 லட்சம் பணம் மலர்க்கொடிக்கு போயுள்ளதாம்.


யார் இந்த மலர்க்கொடி?




மலர்க்கொடியின் கணவர் பெயர் தோட்டம் சேகர். இவரும் ஒரு தாதாதான். ரவுடி சிவக்குமார் கும்பல் இவரை பல வருடங்களுக்கு முன்பு போட்டுத் தள்ளி விட்டது. மலர்க்கொடி வக்கீலாக உள்ளார். அதிமுகவில் திருவல்லிக்கேணி பகுதி இணைச் செயலாளாராக செயல்பட்டு வந்தார். மலர்க்கொடி குரூப்புக்கும், ஆம்ஸ்ட்ராங்குக்கும் எப்படி பகை வந்தது என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். தற்போது மலர்க்கொடியை கட்சியை விட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி  பழனிச்சாமி நீக்கி உத்தரவிட்டுள்ளார். அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.


ஒருவரைத் தீர்த்துக் கட்டுவதற்காக இப்படி பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கை கோர்த்து செயல்பட்டிருப்பது பொதுமக்கள் மட்டுமல்லாமல், அரசியல் கட்சியினர் மத்தியிலும் கூட பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து நடைபெறும் கைதுகள், இந்த வழக்கை மிக மிக விரிவாக, தெளிவாக, நேர்மையாக புலனாய்வு செய்து உண்மையான குற்றவாளிகளுக்கு சரியான, கடுமையான தண்டனை வாங்கித் தர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாக உள்ளது. இல்லாவிட்டால் எதிர்காலத்தில், அரசியல் தலைவர்களுக்கு மட்டுமல்ல , சமூகத்தில் முக்கிய அந்தஸ்தில் விளங்குவோருக்கும் கூட பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி விடும்.


தீவிர விசாரணையில் போலீஸ்


சென்னை போலீஸார் வரலாறு காணாத வகையில் இந்தக் கொலை வழக்கில் அதி தீவிரம் காட்டி வருகின்றனர். இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து ரவுடிகள் வேட்டையாடப்பட்டு வருகிறார்கள். விரைவில் இந்த வழக்கில் அனைத்து துப்பும் முழுமையாக துலங்கி சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் மக்கள் உள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்