சென்னை: தேர்தல் பிரச்சார நேரத்தில் மக்களின் பாச மழையில் வேட்பாளர்கள் நனையத் தவறுவதில்லை. குறிப்பாக ஸ்டார் வேட்பாளர்களைக் கண்டு விட்டால் போதும் பாசக்கார பொதுமக்கள் விடவே மாட்டார்கள். டீ குடிங்க, காபி குடிங்க, இதை சாப்பிடுங்க அதைச் சாப்பிடுங்க என்று அன்பைக் காட்டி அசத்தி விடுவார்கள். இந்தத் தேர்தலிலும் அத்தகைய காட்சிகள் ஏகமாகவே இருக்கின்றது.
தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் படு இயல்பானவர். நம்ம சொந்த அக்கா போலத்தான் அவரும் அத்தனை பாசமாக, நேசமாக பேசக் கூடியவர். யார் அக்கா என்று கூப்பிட்டாலும் முகம் மலர நெருங்கி வந்து அவர்கள் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்பார். அவ்வளவு எதார்த்தனமானவர்.
வடை சாப்பிட்ட டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்
தமிழிசை என்ற பெயரைக் கேட்டதுமே டக்குன்னு நெத்திப் பொட்டில் அடித்தாற் போல காதில் வந்து விழும் குரல் "தாமரை மலர்ந்தே தீரும்".. இந்த ஸ்லோகனை பாஜகவினர் ஏனோ தெரியவில்லை, சரியாக பயன்படுத்தவில்லை என்று தெரிகிறது. ஆனால் மீண்டும் அரசியல் களத்தில் குதித்துள்ள தமிழிசை தனது ஸ்லோகனை மீண்டும் பயன்படுத்தி கலக்கிக் கொண்டிருக்கிறார்.
நேற்று கோயம்பேடு பகுதியில் வாக்கு சேகரிக்க தொண்டர்கள் புடை சூழ கிளம்பினார் தமிழிசை. அப்போது சாலையோரமாக இருந்த வடை கடையைப் பார்த்ததும் குஷியான அவர் வாங்கப்பா வடை சாப்பிடலாம் என்று அங்கே சென்றார். கடைக்காரர்களுடன் பேசிக் கொண்டே வடைக்கு ஆர்டர் செய்தார். சூடாக சில பல வடைகளை சாப்பிட்டு முடித்து விட்டு யுபிஐ மூலம் காசைக் கொடுத்தார். இதுதான் இந்தியாவின் வளர்ச்சி பாருங்க என்றும் பெருமையுடன் கூறினார். அக்கா அக்கான்னு கூப்பிடுவதோடு நிறுத்திக்கக் கூடாது.. எனக்குத்தான் கண்டிப்பாக ஓட்டுப் போடணும் என்றும் கடைக்கார அக்காவிடம் உரிமையோடும், புன்னகையோடும் கூறிக் கொண்டு கிளமபினார் தமிழிசை.
கூழ் குடித்த உதயநிதி
இப்படி தமிழிசை அக்கா ஒரு பக்கம் வடை கடையில் அசத்தினார் என்றால் மறுபக்கம் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலை அருகே செங்கம் பகுதியில் இன்னொரு அக்காவின் பாச மழையில் நனைந்தார். இதை அவரே அவரது வாயால் கூறியுள்ளார். அதைக் கேட்போம் வாங்க..
திருவண்ணாமலையில் நம்முடைய வெற்றி வேட்பாளர் அருமை சகோதரர் சி.என். அண்ணாதுரைக்கு ஆதரவாக இன்று (அதாவது நேற்று) காலை பிரச்சாரம் மேற்கொண்ட பின்னர், செங்கத்துக்கு வாக்கு சேகரிக்க சென்று கொண்டிருந்தோம். முறையார் பகுதியை நெருங்கியதும் அங்கே கூழ் வியாபாரம் செய்து கொண்டிருந்த பேயாளம்பட்டு கிராமத்தை சேர்ந்த அக்கா சின்ன பாப்பா அவர்கள், பாசத்தோடு வந்து வாகனத்தை இடைமறித்தாரகள்.
அன்போடு நலம் விசாரித்த அவர், வெயில் அதிகமாக இருக்கிறது என்று கூறி பருகுவதற்கு கூழை கொடுத்தார். கழக அரசின் சாதனைகளை வாழ்த்தியதோடு, அவருக்கான கோரிக்கையையும் உரிமையோடு முன் வைத்தார். அக்காவின் அன்பில் நெகிழ்ந்தோம். அவருக்கு என் அன்பும், நன்றியும் என்று கூறியுள்ளார் உதயநிதி.
இளநீர் குடித்த எல் முருகன்
என்ன சொல்லுங்க அக்காக்களுக்கு ஈடு இணையே கிடையாது.. அதனால்தானே அவர்களை இன்னொரு தாய் என்று சொல்கிறோம்.. அது சரி அக்கா கதையே பேசிட்டிருந்தா எப்படின்னு.. எங்களையும் பாருங்கப்பு.. என்று பண்ணாரி பக்கமிருந்து ஒரு "அண்ணன்" குரல் அழைத்தது.. எட்டிப் பார்த்தால் நம்ம எல். முருகன் இளநீர் குடிச்சிருக்காப்ள!
நீலகிரி தனி தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடுகிறார் எல். முருகன். மத்திய இணையமைச்சராக உள்ள அவர் தற்போது ராஜ்யசபா எம்.பியாகவும் இருக்கிறார். நீலகிரி தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ. ராசாவுக்கு டஃப் கொடுப்பதற்காக முருகனை இறக்கியுள்ளது பாஜக.
நேற்று பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பண்ணாரி அம்மன் திருக்கோவிலில் தரிசனம் செய்துவிட்டு தேர்தல் பிரச்சார பயணம் மேற்கொண்ட போது, சாலையோர இளநீர் கடையில் இளநீர் அருந்தி மகிழ்ந்துள்ளார் எல். முருகன். கடைக்காரருடன் பேசி நலம் விசாரித்த அவர் அங்கு திரண்டிருந்த பொதுமக்களுடனும் கலந்து பேசி மகிழ்ந்துள்ளார். இதை ஒரு வீடியோவாகவும் போட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலினுக்கு டீயே போதும்!
இப்படி எல்லோரும் கூழ், வடை, இளநீர் என்று கலக்கிக் கொண்டுள்ள நிலையில் இன்னொரு பக்கம் முதல்வர் மு.க.ஸ்டாலின் எனக்கு டீயே போதும் என்பது போல காலையில் வாக்கிங்கோடு மக்களைச் சந்தித்துப் பேசி பின்னர் ஒரு டீயுடன் தனது தினசரி பிரச்சாரத்தைத் தொடங்கி அசத்திக் கொண்டிருக்கிறார்.
நாமளும்தான் டெய்லி டீ டிபன் வடை போண்டா பஜ்ஜின்னு சாப்பிடறோம்.. யாராச்சும் செய்தியா போடறாங்களா என்று சாமானியர்களின் மைன்ட் வாய்ஸ் சத்தமாத்தான் கேக்குது.. ஒன்னும் பண்ண முடியாது. இப்ப தேர்தல் நேரம்.. ஸோ.. இந்த மாதிரி செய்திகள்தான் நிறைய வரும்.. கண்டுக்காதீங்க.. என்ஜாய் பண்ணுங்க!
நாயகன் மீண்டும் வர்றார்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின்.. செம கேட்ச்தான்!
CKS rocks.. அஸ்வின், ரச்சின் ரவீந்திரா, டேவன் கான்வே, ராகுல் திரிபாதி.. செம கேம் பிளான்தான்!
A R Rahman.. உலகிலேயே மிகவும் சிறந்த மனிதர் ஏ.ஆர். ரஹ்மான்.. உருக்கமான ஆடியோ வெளியிட்ட சாய்ரா பானு
பொங்கல் நாளன்று தேர்வு.. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கிறீர்களா.. மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
இலவச வாக்குறுதிகள்.. மகாராஷ்டிராவை பாஜக வெல்ல முக்கியக் காரணம்.. இன்னொன்று.. பலவீனமான காங். கூட்டணி!
இந்தியாவில் எப்படி ஓட்டுக்களை எண்ணுறாங்க பாருங்க.. அமெரிக்க மானத்தை.. முடிச்சு விட்ட எலான் மஸ்க்!
IPL Auction 2025.. ஐபிஎல் மெகா ஏலம்.. திக் திக் காத்திருப்பில் 577 வீரர்கள்.. செம கிராக்கி யாருக்கு?
அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை.. தெளிவான முடிவெடுத்த தலைவர் ஜானகி அம்மாள்.. ரஜினிகாந்த்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 24, 2024.. யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}