தந்தை பெரியார் மற்றும் எம்ஜிஆர் நினைவு தினம்.. புகழாரம் சூட்டி அஞ்சலி செலுத்திய தலைவர்கள்!

Dec 24, 2024,01:30 PM IST

சென்னை: தந்தை பெரியாரின் 51வது நினைவு தினம் மற்றும் எம்ஜிஆரின் 37வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று அவர்கள் நினைவிடங்களில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் அஞ்சலி  செலுத்தினர்.


தந்தை பெரியாரின் 51ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியாரின் உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 


இந்த நிகழ்வில் திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், திமுக எம்பி  கனிமொழி, அமைச்சர்கள் சேகர்பாபு, சாமிநாதன், மேயர் பிரியா, ஆர்.எஸ்.பாரதி,  எம்.பி.க்கள், மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர் .


இதனை தொடர்ந்து சென்னை வேப்பேரி பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். பின்னர் பெரியார் திடலில் டிஜிட்டல் நூலகம் ஆய்வு மையத்தையும் அவர்  திறந்து வைத்தார். பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவது பல்வேறு பகுதிகளில் பல்வேறு கட்சித் தலைவர்கள் அவரை உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.  திமுக சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.




பெரியார் பகுத்தறிவு எணினி நூலகம் திறப்பு


தந்தை பெரியாரின் 51 வது நினைவு தினத்தை ஒட்டி சென்னையில் நடைபெற்ற தந்தை பெரியார் பகுத்தறிவு எணினி நூலக திறப்பு விழாவில் கலந்து கொண்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். விழாவின்போது அவர் பேசியதாவது:


பெரியாரின் நினைவிடத்திற்கு வந்ததை தாய் வீட்டிற்கு வந்தது போல் உணர்கிறேன். பெரியாரிடம் கற்றிருக்கும் 

பாடத்தையே கி.வீரமணி இன்று வெளிப்படுத்துகிறார்.  கி. வீரமணி அளித்த பெரியாரின் கைத்தடிக்கு எதுவும் ஈடாகாது. பெரியாரின் தொண்டராக ஆசிரியர் கி வீரமணியை வாழ்த்துகிறேன்.


திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு பெரியாரின் கைத்தடி ஒன்றே போதும். தமிழினம் சுயமரியாதை பெற தனது வாழ்நாள் முழுவதும் பெரியார் உழைத்தார். பெரியார் மறைந்து 51 ஆண்டுகாலம் ஆன பிறகும் அவரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். இதுதான் அவரின் தனித்தன்மை. 


ஒற்றுமைக்காகவும் சுய மரியாதைக்காகவும் ஈடுபட்டவர் பெரியார்.பெரியாரின் வரலாறு இன்றைய இளம் தலைமுறையினரிடம் எடுத்துச் செல்லப்படுகின்றன. உலகின் பொது சொத்தாக பெரியாரை சேர்த்திருக்கிறோம் என புகழாரம் சூட்டினார்.


எம்ஜிஆர் 37வது நினைவு தினம்




மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 37வது நினைவு நாளும் இன்று மாநிலம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள், எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.


மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரை நினைவு கூறும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். எம்ஜிஆர் நினைவிடத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த இடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் திரளான தொண்டர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்து மலர் தூவி தங்கள் மரியாதைகளை செலுத்தினர்.


அதேபோல அதிமுக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு தங்களிடம் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவும் எம்ஜிஆருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இதுதவிர அமமுக தலைவர் டிடிவி தினகரன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் எம்ஜிஆருக்கு அஞ்சலி செலுத்தினர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்