சென்னை: வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி என்று பாடல் இருப்பது போல இப்போது மக்கள் வெயிலோடு ஜாலியாக உறவாடிக் கொண்டுள்ளனர். அதேசமயம், இந்த விளையாட்டு அளவாக இருக்கும் என்பதை காவல்துறையின் நடவடிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
இந்த முறை கடுமையாக இருக்கிறது கோடைக்காலம். வெயில் வெளுத்தெடுக்கிறது. வெயில் காலம் ஆரம்பிப்பதற்கு முன்பே பல ஊர்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெயில் கொளுத்தியது. தற்போது மேலும் அதீதமாக வெயில் வெளுத்து வருகிறது. சில ஊர்களில் கோடை மழையும் பெய்கிறது.
வெயில் கொடுமையால் மக்கள் விதம் விதமான விளையாட்டுக்களில் இறங்கியுள்ளனர். அதாவது கொதிக்கும் சாலையில் முட்டையைப் போட்டு ஆம்லேட் செய்வது ஆப்பாயில் போடுவது என்று கிளம்பியுள்ளனர். இதற்கு போலீஸார் தற்போது கிடுக்கிப்பிடி நடவடிக்கை எடுத்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். சேலத்தில் பிரபாகரன் என்ற தன்னார்வலர் ஒருவர் தனது நண்பரை அழைத்துக் கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். கலெக்டர் அலுவலகத்திற்கு எதிரே உள்ள ரவுண்டானாவில் அமர்ந்த அவர்கள் சாலையில் முட்டையை உடைத்து ஆம்லேட் போட்டனர். இதை பார்க்க மக்கள் பலர் கூடி விட்டனர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த போலீஸார் இருவரையும் ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையம் கூட்டிச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, வெயில் கொடுமை அதிகம் இருக்கிறது என்பதை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இது போல செய்ததாக அவர்கள் கூறினர். அதன் பின்னர் பொது இடத்தில் இதுபோல மக்களைப் பாதிக்கும் வகையில் செயல்படக் கூடாது. முதல் முறை என்பதால் எச்சரித்து அனுப்புகிறோம் என்று கூறி இருவரையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
மழையை எப்படி கொண்டாடுகிறோமோ அதேபோல வெயிலையும் சந்தித்து சமாளிப்போம். அதேசமயம், பொது இடத்தில் நாலு பேருக்கு டிஸ்டர்பன்ஸ் ஏற்படுவது போல இதுபோல நடக்காமலும் இருக்க வேண்டியது நமது கடமையாகும். பொறுப்புணர்வோடு நடந்து கொள்வோம். பொது இடத்தில் இதுபோல ஏடாகூடாமாக செய்து சிக்கிக் கொள்ளாதீர்கள்.
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!
தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}