சென்னை: சர்ச்சைக்குரிய சொற்பொழிவு ஆற்றிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர் செய்யப்பட்டார்.
சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் சொற்பொழிவு ஆற்றிய விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. மகாவிஷ்ணு மீது தொடர்ந்து பல புகார்கள் எழுந்ததால் அவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து மகாவிஷ்ணுவை கைது புழல் சிறையில் அடைத்தனர்.
புழல் சிறையில் அடைக்கப்பட்ட மகாவிஷ்ணுவின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைவதால் அவரை இன்று சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பலத்த பாதுகாப்புடன் அவரை வேனில் கொண்டு வந்து கோர்ட்டுக்குள் அழைத்துச் சென்றது போலீஸ். மகாவிஷ்ணுவை ஏழு நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து மனு செய்துள்ளனர். மறுபக்கம் ஜாமின் கோரி மகாவிஷ்ணு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் விசாரணை தீவிரமடைந்துள்ளது. விரைவில் இதுதொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்படும். அதன் பேரில் அரசு மேல் நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று கருதப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சிங்கம்-கழுகு கூட்டணியா?.. சிலாகிக்கும் நா.த.க.. சீமான் சொன்ன பதில்.. ரஜினியுடன் சந்திப்பு ஏன்?
ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!
Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
{{comments.comment}}