அனுமதி இன்றி கொடிக் கம்பங்கள் வைத்த.. தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீது வழக்கு

Feb 20, 2024,01:42 PM IST

கள்ளக்குறிச்சி: அனுமதி இன்றி கொடிக்கம்பம் வைத்ததற்காக கள்ளக்குறிச்சியில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யட்டுள்ளது.


நடிகர் விஜய் பிப்ரவரி 2ம் தேதி தமிழக  வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்து அறிக்கையையும் வெளியிட்டார். நாடாளுமன்ற தேர்தல் இல்லங்க... 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தல் தான் எனது இலக்கு. அதுவரைக்கும் கமிட்டான படங்களை நடித்து கொடுத்து விட்டு வருகிறேன் என்று கூறியிருப்பது அனைவரும் அறிந்ததே. 




இந்நிலையில்,  கட்சியின் பெயர் தமிழக வெற்றி கழகம் என்று இருந்தது. தற்போது அதில் இருந்த  எழுத்துப் பிழை நீக்கப்பட்டு கட்சியின் பெயர் தமிழக வெற்றிக் கழகம் என மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடந்தது. 


இதற்கிடையே, கள்ளிக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை சட்டசபைத் தொகுதியில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கொடிக் கம்பங்கள் வைக்கப்பட்டன. காவல் துறையின் அனுமதி பெறாமல் கொடுக்கம்பங்கள் வைக்கப்பட்டதால், தமிழக வெற்றி கழக  மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜி உள்பட 20க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அனுமதி இன்றி வைக்கப்பட்ட கொடி கம்பங்கள் தற்போது அகற்றப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்