விபத்தை ஏற்படுத்திய மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர்...லைசன்சை ரத்து செய்த போலீஸ்

Oct 17, 2024,11:35 AM IST

எர்ணாகுளம் : விபத்தை ஏற்படுத்தி விட்டு, காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்று, தப்பிக்க முயன்ற மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் நடிகர் ஸ்ரீநாத் பாஷியின் டிரைவிங் லைசன்சை போலீசார் ரத்து செய்துள்ளனர். இது மலையாள திரையுலகில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.


மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் மஞ்சுமெல் பாய்ஸ். பலரின் பாராட்டுக்களையும், சர்வதேச அளவில் பல விருதுகளையும் வென்றது இந்த படம். கொடைக்கானல் குணா குகையில் எடுக்கப்பட்டது, படம் முழுக்க வரும் குணா படத்தின் அபிராமி பாடலின் இசை ஆகியவை மொழியை கடந்த தமிழ் ரசிகர்களையும் இந்த படம் பெரிதும் ஈர்த்தது. எளிமையான கதையில் இப்படி ஒரு திரில்லர் படமா? இப்படி கூட ரசிகர்களை மொத்தமாக கட்டிப் போட்டு, படத்துடன் ஒன்ற வைத்து படம் எடுக்க முடியுமா? என பலரையும் ஆச்சரியப்பட வைத்த சமீப கால இந்திய சினிமாவின் முக்கியமான படமாக இந்த படம் அமைந்திருந்தது.




இந்த படத்தில் நடித்த நடிகர்கள் பலரும் புதிய முகங்களாக இருந்தாலும் இந்த ஒரே படத்திலேயே பிரபலமாகி விட்டனர். இந்த படத்தில் சுபாஷ் என்ற மிக முக்கியமான கேரக்டரில் நடித்தவர் தான் ஸ்ரீநாத் பாஷி. எர்ணாகுளத்தில் காரில் சென்ற ஸ்ரீநாத், பைக்கில் வைத்த இளைஞர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றுள்ளார். இந்த காட்சிகள் விபத்து நடந்த இடத்திற்கு அருகில் இருந்த சிசிடிவி  கேமிராவில் பதிவாகி இருந்தது. இதன் அடிப்படையில் ஸ்ரீநாத் கைது செய்யப்பட்டு, பிறகு ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.


இருந்தாலும் அதிவேகமாக காரை ஓட்டி, விபத்தினை ஏற்படுத்திய குற்றத்திற்காக அவரது டிரைவிங் லைசன்சை ஒரு மாதத்திற்கு ரத்து செய்து எர்ணாகுளம் போலீசார் உத்தரவிட்டுள்ளனர். ஏற்கனவே நடிகைகள் அளித்த பாலியல் புகாரால் மலையாள திரையுலகில் முக்கிய நடிகர்கள் பலரும் கைது செய்யப்பட்டு, பலரிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கும் பரபரப்பான சூழலில் வளர்ந்து வரும் நடிகர் ஒருவரும் இது போன்ற பிரச்சனையில் சிக்கி உள்ளது மலையாள திரையுலகில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன் திடீர் ஆலோசனைக் கூட்டம்.. என்னவாக இருக்கும்..?

news

Today gold price: இதுக்கு ஒரு என்டு கார்டே இல்லையா... 1 கிராம் ரூ.10,000த்தை நெருங்கும் தங்கம் விலை!

news

அடிக்கிற வெயிலுக்கு லெமன் ஜூஸை குடிக்க நினைத்தால்.. எலுமிச்சை விலை அதிரடி உயர்வு..!

news

98 வது ஆஸ்கர் விருது விழா எப்போது நடைபெறும்..? தேதி குறிச்சாச்சு!

news

பிளாஸ்டிக் வேண்டாம்.. வேண்டவே வேண்டாமே.. கிரிஷ் சொல்லியாச்சு.. அப்ப நீங்க?.. கதையல்ல நிஜம்!

news

Today is Earth Day.. நம்மைக் காக்கும் அன்னை.. பூமியைக் காக்க விழித்துக்கொள்வோம்!

news

போப் ஆண்டவர் பிரான்சிஸ் மறைவையொட்டி.. மூன்று நாட்கள் துக்கம் அனுசரிப்பு.. மத்திய அரசு!

news

Summer Rains.. தமிழ்நாட்டில்.. அடுத்த ஒரு வாரத்திற்கு வெயில் + மழை.. இதாங்க நிலவரம்..!

news

Election of new Pope: புதிய போப்பாண்டவர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்?

அதிகம் பார்க்கும் செய்திகள்