பாஜக வேட்பாளர் கிருஷ்ணகுமார் கண்ணுல காயம் ஏற்பட்டது எப்படி.. பாஜக தொண்டர் அதிரடி கைது!

Apr 23, 2024,03:58 PM IST

கொல்லம்: கொல்லம் லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளரும், நடிகருமான கிருஷ்ணகுமாரின் கண்ணில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது அவரது கட்சியைச் சேர்ந்த தொண்டர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.


நடிகரான கிருஷ்ணகுமார் பாஜகவில் செயல்பட்டு வருகிறார். அவர் கொல்லம் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும்  கூட சமீபத்தில் பிரச்சாரம் செய்திருந்தார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகுமார் முலவன என்ற இடத்தில் பிரச்சாரம் செய்தபோது அவரது கண்ணில் காயம் பட்டது. 




இதையடுத்து போலீஸில் கிருஷ்ணகுமார் புகார் கொடுத்தார். அதில், எதிர்க்கட்சியினரான சிபிஎம் கட்சியைச் சேர்ந்தவர்தான் கடுமையான ஆயுதத்தைக் கொண்டு தன்னைத் தாக்கி விட்டதாக கிருஷ்ணகுமார் புகார் கூறியிருந்தார். இந்த விவகாரம் குறித்து குந்தாரா போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.


இந்த நிலையில் தற்போது பாஜகவைச் சேர்ந்த சனல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்தான் கிருஷ்ணகுமாரின் கண்ணில் ஏற்பட்ட காயத்துக்குக் காரணம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். போலீஸார் நடத்திய விசாரணையில் சனல் வைத்திருந்த சாவி தெரியாமல் கிருஷ்ணகுமாரின் கண்ணில் பட்டு விட்டது. இதனால் கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது. 


இதையடுத்து அவரை தற்போது போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தக் கைதின் மூலம் கிருஷ்ணகுமாரைத் தாக்கியவர் சிபிஎம் கட்சியைச் சேர்ந்தவர் இல்லை என்றும் இது தற்செயலாக நடந்த சம்பவமே தவிர தாக்குதல் அல்ல என்றும் தெரிய வந்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்