பைக் வீலிங் செய்து விபத்து.. படுகாயமடைந்த டிடிஎப் வாசன் கைது.. நடந்தது என்ன?

Sep 19, 2023,11:17 AM IST

காஞ்சிபுரம்: தேசிய நெடுஞ்சாலையில் பைக்கை அதி வேகமாக ஓட்டி அபாயகரமான முறையில் வீலிங் செய்து படுகாயமடைந்த டிடிஎப் வாசன் இன்று போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.


சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாலுசெட்டி சத்திரம் பகுதியில் படு வேகமாக பைக் ஓட்டிச் சென்ற டிடிஎப் வாசன் வீடியோ பதிவு செய்து கொண்டே, வீலிங் சாகசத்தில் ஈடுபட்டதால் பைக் நிலை தடுமாறி பறந்து சென்று விழுந்து விபத்திற்கு உள்ளானது. அதி நவீன ஹெல்மட், பாதுகாப்பு கவச உடைகள் அணிந்திருந்ததால் டிடிஎப் வாசன்  சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். 


நல்ல வேளையாக அவர் பைக் மோதி விழுந்த இடத்தில் யாரும் இல்லை. யாரேனும் இருந்திருந்தால் நிச்சயம் உயிரிழந்திருப்பார்கள். அந்த அளவுக்கு வேகமாக வந்து மோதி விழுந்தது அவர் ஓட்டி வந்த பைக். சாலையில் சென்றோர் வாசனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் இவருக்கு உடலில் சிறு சிறு காயங்கள் மற்றும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறினர்.


வாசனின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. சமூக வலைதளங்களில் பலரும் வாசனைக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். அழுத்தம் அதிகரித்ததால் பாலுசெட்டிசத்திரம் போலீஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.




யார் இந்த டிடிஎப் வாசன்:

டிடிஎப் வாசன் என்பவர் பிரபல யூட்யூபர். இவர் Twin Throttlers என்ற youtube பக்கத்தை நடத்தி வருகிறார்.  கடந்த இரண்டு வருடங்களாக ட்ராவல் விலாக் என்ற பக்கத்தையும் உருவாக்கி உள்ளார். இவருக்கு இருபத்தி லட்சத்திற்கும் அதிகமான ஃபேன் பாலோவர்ஸ் உள்ளனர்.

டிடிஎப் வாசன் பைக்கில் சாகசம் செய்வது பற்றிய வீடியோவை அவ்வப்போது வெளியிட்டு வந்துள்ளார். சமீபத்தில் லடாக் சென்று அங்கு பைக்கை வேகமாக ஓட்டுவது போன்ற வீடியோவை பதிவிட்டு இருந்தார். டூ கே கிட்ஸ் என சொல்லக்கூடிய பைக் மீது ஆர்வமாக உள்ள பலர் இவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். அதிக வேகத்தில் பயணம் ,வீலிங் செய்வது, போன்ற சாலை விதிகளை மீறிய வழக்குகளில் காவல்துறையினரால் பலமுறை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தற்போது தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும்போது வீடியோ எடுத்துக் கொண்டே பைக் வீலிங் செய்ததால் வாகனம் நிலைதடுமாறி விபத்திற்கு உள்ளானது .இதனால் காவல்துறையினர் டிடிஎஃப் வாசன் மீது மனித உயிருக்கு ஆபத்து உண்டாக்குவது, பிறருடைய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பது உள்ளிட்ட இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது போன்ற நபர்கள் சட்டத்தை மீறுவதுடன் மட்டும் இல்லாமல் இளைஞர்களின் வாழ்க்கையை வீணடிக்கின்றனர் . இவர் தான் பெரிய ஆள் என தன்னை சித்தரித்தும், இளைஞர்களின் மனதை கெடுத்தும் வருகின்றனர் என பல வழிகளில் புகார்கள் எழுந்து வருகின்றன. நாங்கள் இது போன்றவர்களை விடமாட்டோம் உரிய நடவடிக்கை  எடுப்போம் எனவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

LIC website.. இது தொழில்நுட்பக் கோளாறில்லை... அரசியல் கோளாறு.. மதுரை எம்.பி சு.வெங்கடேசன்

news

Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்

news

Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?

news

மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்

news

தங்கம் விலை விடாமல் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது ஏன்.. நிபுணர்கள் தரும் விளக்கம் இதுதான்!

news

கிண்டி அரசு மருத்துவமனை டாக்டரைக் கத்தியால் குத்திய விக்னேஷுக்கு.. ஜாமீன் மறுப்பு!

news

TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!

news

AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!

news

Lunch box recipe: கோவக்காய் வேர்க்கடலை பொறியல்.. ஒரு விசில்.. ஒரு பொறியல்.. ஓஹோ டேஸ்ட்!

அதிகம் பார்க்கும் செய்திகள்