சென்னை: திரைப்படப் பாடலாசிரியல் கபிலனின் மகள் தூரிகை மறைந்து ஒரு வருடத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் தனது மகள் குறித்த நினைவை டிவீட் செய்துள்ளார் கபிலன்.
திரைப்படப் பாடலாசிரியர் கபிலனின் மகள்தான் தூரிகை. தந்தையைப் போலவே மிகவும் திறமையானவர். கவிஞராக, ஆடை வடிவமைப்பாளராக, எழுத்தாளராக பன்முகத் திறமையாளராக வலம் வந்தவர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி அவர் தனது சென்னை அரும்பாக்கம் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். தற்கொலை மூலம் அவர் தனது முடிவைத் தேடிக் கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர். தூரிகை மிகவும் தைரியமான, புத்திசாலியான பெண். அவர் இப்படி ஒரு முடிவை எடுத்ததை யாராலும் நம்ப முடியவில்லை. அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துத அந்த சம்பவம்.
இந்த நிலையில் தனது மகள் தூரிகை இறந்து ஒரு வருடமாகிறது என்று டிவீட் செய்துள்ளார் கபிலன். மகளை இழந்த நிலையில் கபிலன் மிகவும் மனதொடிந்த நிலையில்தான் வலம் வருகிறார். தனது மகள் நினைவாக அவ்வப்போது ஏதாவது ஒரு கவிதை அல்லது நினைவைப் பதிவிட்டு வருகிறார் கபிலன். தனது மகளின் நினைவாக மகள் என்ற பெயரில் ஒரு கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டார். அதை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார் என்பது நினைவிருக்கலாம்.

வாழ்க்கை முடியப் போவதுதான்.. ஆனால் அது அதுவாக முடிய வேண்டும்.. எப்படி வாழ்க்கையைத் தொடங்கியதற்கு நாம் காரணம் இல்லையோ அது போலத்தான் வாழ்க்கையின் முடிவுக்கும் நாம் காரணமாக இருக்கக் கூடாது, முடியாது. எப்படி வந்தோமோ அப்படித்தான் நாம் போக வேண்டும்.. வந்தது நம் கையில் இல்லை.. வந்த பிறகு வந்த வாழ்க்கையை முடிப்பதற்கான உரிமையும் நம் கையில் இல்லை. வாழ்ந்து பார்க்க வேண்டும்.. வேதனைகள், சிக்கல்கள், விரக்திகள், இயலாமைகள் நம்மைப் போட்டுப் பிழிந்தாலும் கூட.. முடிந்தவரை என்னைப் படுத்தி எடு.. முடியாத போது ஓட்டம் எடு என்று அதற்கு சவால் விட்டு புன்னகையுடன், எல்லா அழுத்தங்களையும் புறம் தள்ளி நிமிரும்போது எத்தகைய எதிர்ப்பும் திரும்பிப் பார்க்காமல் ஓடும்.. வாழ்க்கையில் போராடுங்கள்.. தவறே இல்லை.. போராடினால்தான் வெல்ல முடியும்.. போராடத வாழ்க்கை அர்த்தமற்ற வாழ்க்கையே.. தன்னம்பிக்கையை தோளில் போட்டுக் கொண்டு, தவறான முடிவுகளையும், எண்ணங்களையும் தரையில் போட்டு மிதித்து விட்டு முன்னேறுங்கள்.. வாழ்க்கை அழகானது.
{{comments.comment}}