சென்னை: தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 71 சென்சஸ்படி அப்போது 543 தொகுதிகள் எண்ணிக்கையிலேயே தமிழ்நாடு 39 தொகுதியில் விகிதாச்சாரம் 7.18 குறையக்கூடாது என்ற நிலைபாட்டை அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து எடுத்திருக்கின்றோம் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பிறகு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது,
அன்பு ஊடக நண்பர்களுக்கு வணக்கம். இன்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் இந்தியாவில் தொகுதிகள் மறு சீரமைப்பு செய்வதாக மத்திய அரசு இன்னும் அறிவிக்காத நிலையில், அவர் தலைமையிலேயே ஒரு அனைத்து கட்சி கூட்டம் நடத்தி நான்கு மணி நேரம் விவாதம் செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி கலந்து கொண்டு எங்களுடைய கருத்துக்களை அதில் பதிவு செய்தோம். குறிப்பாக, இன்னும் மத்திய அரசு கொள்கை முடிவு எடுக்கவில்லை. எந்த அறிவிப்பும் அறிவிக்கவில்லை. ஆனாலும் சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கோவையில் பேசுகையில், தமிழ்நாட்டில் ஒரே ஒரு தொகுதி கூட குறைக்க மாட்டோம். தென் மாநிலங்களில் ஒரு தொகுதி கூட குறைக்க மாட்டோம் என்று அழுத்தம் திருத்தமாக கூறினார். அப்பொழுது வட மாநிலங்களில் எத்தனை தொகுதிகள் அதிகப்படுத்துவார்கள் என்றெல்லாம் சொல்லவில்லை. ஆக இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் நிச்சயமாக மத்திய அரசு அவர்களுக்குள் இந்த பிரச்சனையை பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது இன்னும் தெளிவுபடுத்தவில்லை. அதனால் இங்கே பாட்டாளி மக்கள் கட்சி கலந்து கொண்டு பாதிக்கப்படுகின்ற தென் மாநிலங்களில் ஒருங்கிணைந்து நாம் எல்லோரும் ஒன்றாக இணைய வேண்டும் என்று ஒரு கருத்தை வைத்தோம்.
இந்தியாவில் இதற்கு முன்பு மூன்று முறை தொகுதி மறு சீரமைப்பு செய்யப்பட்டிருக்கிறது. 52ல், 63ல் 73ல் தொகுதி மறு சீரமைப்பு செய்யப்பட்டிருக்கிறது.அதன் பிறகு 76 இல் இந்திரா காந்தி அவர்கள் அவசர காலத்தில் இன்னும் 25 ஆண்டுகள் மறு சீரமைப்பு இல்லை என்று அரசியல் சாசன 42வது சட்ட திருத்தத்தின்படி கொண்டு வந்தார். இது 2021ல் முடிவடைந்தது. பிறகு 2022-ல் வாஜ்பாய் முன்னாள் பிரதமர் அவர்கள் மேலும் 25 ஆண்டுகளுக்கு நீடித்தார். அதில் ஒரு திருத்தம் தொகுதியில் எண்ணிக்கை அப்படித்தான் இருக்கும். ஆனால் எல்லைகளை மாற்றலாம் என்று 84 ஆவது அரசியல் சட்ட திருத்தம் கொண்டு வந்தார். இந்த திருத்தம் அடுத்த ஆண்டு 2026 இல் முடிவடைகிறது. இதற்கு இடையில் 2021 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும்.ஆனால் இன்னும் நடக்கவில்லை. கொரோனா ஆண்டுகள் என்பதால் நடத்தப்பட முடியவில்லை. இந்த ஆண்டு கூட நினைத்தால் நடத்தலாம் என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்தால் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய இடத்து வரும்.தோராயமாக இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு 142 கோடியாக இருந்தால் கூடுதலாக 753 தொகுதிகள் வரும். அதில் தென் மாநிலங்களுக்கு மட்டும் வெறும் 15 தொகுதிகள் தான் வரும். வட மாநிலங்களுக்கு 195 தொகுதிகள் கிடைக்கும். அதிலும் குறிப்பாக உத்தரப்பிரதேசத்திற்கு 48 தொகுதிகள் கிடைக்கும். கூடுதலாக பீகாருக்கு 30 தொகுதிகள் கிடைக்கும். மகாராஷ்டிராவிற்கு கூடுதலாக 20 தொகுதிகள் கிடைக்கும் தமிழ்நாட்டிற்கு வெறும் இரண்டு தொகுதிகள் தான் கூடுதலாக கிடைக்கும். கேரளாவுக்கு ஒரு தொகுதிகள் குறையும். ஒட்டுமொத்த தென் மாநிலங்களுக்கு மொத்தம் 15 தொகுதிகள் தான் கிடைக்கும். வட மாநிலங்களுக்கு 195 தொகுதிகள் 142 கோடி மக்கள் தொகை இருந்தால்.
இந்த நிலை இருக்கக்கூடாது என்ற கருத்தை நாங்கள் முன் வைத்தோம். மொத்தத்தில் 30 விழுக்காடு தொகுதிகளை அதிகப்படுத்தினார்கள் என்றால் தமிழ்நாட்டில் 30 விழுக்காடு எண்ணிக்கை அதிகப்படுத்த வேண்டும். இதே முப்பது விழுக்காடு தொகுதியில் தான் அதிகப்படுத்த வேண்டும்.உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்கும் இதே அளவிலே அதிகப்படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 71 சென்சஸ்படி அப்போது 543 தொகுதிகள் எண்ணிக்கையிலேயே தமிழ்நாடு 39 தொகுதியில் விகிதாச்சாரம் 7.18 குறையக்கூடாது என்ற நிலைபாட்டை அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து எடுத்திருக்கின்றோம். அதுமட்டுமில்லாமல் நம் ஒன்றாக அணுக வேண்டும் என்ற நோக்கம்.அதே போன்று இந்த இரு மொழிக் கொள்கை, மும்மொழிக் கொள்கை என்ற பிரச்சனை தொடர்பாக முதலமைச்சர் இன்னும் ஒரு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்தோம். அதேபோல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என இதற்கு ஒரு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் எனவும் முதலமைச்சருக்கு பாட்டாளி மக்கள் கட்சி கோரிக்கை வைத்திருக்கின்றோம். அதுமட்டுமல்லாமல் முதல்வர் அவர்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் ஒரு குழுவாக நாங்கள் டெல்லிக்கு செல்கிறோம். டெல்லியில் அமைச்சர்களை சந்தித்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழ்நாட்டிற்கு அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்துவோம் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பிலேயே பேசி இருக்கிறோம். மத்திய அரசு என்ன செய்ய இருக்கிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புகள் நடத்துவார்கள். இதற்கு முன்பாகவே 25 ஆண்டுகள் கெடு முடியும். அப்படி நடத்தினார்கள் என்றால் மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும். தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்று முன்கூட்டியே இது போன்ற கூட்டத்தை கூட்டி மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பது எங்களின் கருத்து எனக் கூறியுள்ளார்.
தனிநபரின் இமெயில், சமூக வலைதள கணக்குகளை அனுமதியின்றி அணுகலாம்.. வருமானத்துறைக்கு புது அதிகாரம்
லண்டன் கிளம்பினார் இசைஞானி இளையராஜா.. இது என்னுடைய பெருமை அல்ல.. நாட்டின் பெருமை.. என நெகிழ்ச்சி!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் மார்ச் 06, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
தொகுதிகள் மறு வரையறையை 30 வருடத்திற்குத் தள்ளி வையுங்கள்.. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்
வெயில் காலங்களில்.. சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது.. சூப்பராக வந்த ஹேப்பி நியூஸ்!
தொகுதி மறு சீரமைப்பு தேவையற்றது.. தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்..!
விகிதாச்சாரம் குறையக்கூடாது.. அனைத்துக் கட்சிகளின் நிலைப்பாடு இது.. டாக்டர் அன்புமணி ராமதாஸ்
அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட தேவை எழுந்துள்ளது.. விசிக தலைவர் திருமாவளவன்..!
ஹலோ.. இன்னிக்கு எவ்வளவு தண்ணீர் குடிச்சீங்க.. வெளில வெயிலைப் பார்த்தீங்கள்ள.. கவனம்!
{{comments.comment}}