கட்டாயத் தேர்ச்சி முறையை.. ரத்து செய்யக்கூடாது.. மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!

Dec 24, 2024,05:10 PM IST

சென்னை:  மத்திய அரசு பள்ளிகளில் 5, 8-ஆம் வகுப்புகளில் தற்போது நடைமுறையில் உள்ள கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்யக் கூடாது. அனைவரும் தேர்ச்சி முறை தொடர வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர்  ராமதாஸ் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.


மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா, சைனிக் பள்ளிகள் உள்ளிட்ட 30,000 பள்ளிகளில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளில் கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநில அரசு நடத்தும் பள்ளிக்ளைப் பொறுத்தவரை அந்தந்த மாநில அரசுகளே முடிவெடுத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.


ஒரு மாணவர் ஐந்து அல்லது எட்டாம் வகுப்பில் படித்து, அடுத்த வகுப்பிற்கு செல்ல தேர்ச்சி பெறவில்லை என்றால் தேர்வு முடிந்து இரண்டு மாதத்திற்குள் மீண்டும் ஒரு தேர்வு முறை நடத்தப்படும்.  அதிலும் வெற்றி பெறவில்லை என்றால் தொடர்ந்து ஐந்தாம் வகுப்பிலோ அல்லது எட்டாம் வகுப்பிலோ படிக்க வேண்டும். மீண்டும் அதே வகுப்பில் தொடரும் மாணவர்கள் கற்றலில் எந்த இடத்தில் குறைபாடு உள்ளது என்பதை கண்டறிந்து அவர்களுக்கான வழிகாட்டல்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.




இதற்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில் கட்டாயத் தேர்ச்சி முறை ரத்து செய்யப்படக் கூடாது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி வழங்கும் முறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கல்வித்தரத்தை மேம்படுத்துதல் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை கிராமப்புற ஏழை மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை பறித்து விடும். இது மிகவும் தவறான முடிவு.


மத்திய அரசு பள்ளிகளில் படிப்பவர்கள் அனைவரும் நகர்ப்புற பணக்காரர்கள் வீட்டு பிள்ளைகள் அல்ல.  அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 25% இட ஒதுக்கீட்டில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுகிறார்கள்.  5 அல்லது 8-ஆம் வகுப்பில் அவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்படாவிட்டால், அவர்கள் அத்துடன் படிப்பை நிறுத்தி விடுவார்கள். அப்படி ஒரு  நிலை உருவாகக் கூடாது என்பதற்காகத் தான்  எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என்ற தத்துவம் உருவாக்கப்பட்டது.


தமிழ்நாட்டில்  2020-ஆம் ஆண்டில்  5 மற்றும் 8&ஆம் வகுப்புகளுக்கு 2020&ஆம் ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என  அப்போதைய தமிழக அரசு அறிவித்தது. அதைக் கண்டித்து  அந்த ஆண்டு ஜனவரி 28ம் ம் தேதி தமிழ்நாடு முழுவதும் பாமக சார்பில் அறப்போராட்டம்  அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பாமகவுடன் பேச்சு நடத்திய அன்றைய கல்வி அமைச்சர் செங்கோட்டையன், 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து என்றும், அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.


கிராமப்புற  ஏழை மாணவர்கள் முழுமையான கல்வி சுதந்திரம் பெறும் வரை, எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி முறை தொடர வேண்டும். எனவே, மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி வழங்கும் முறையை தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கெளதம் கம்பீர், ரோஹித் சர்மாவை நேரில் அழைத்து விசாரிக்க பிசிசிஐ முடிவு.. தொடர் தோல்விகளால் கோபம்!

news

7ஜி ரெயின்போ காலனியை கையில் எடுத்த செல்வராகவன்.. terrible comboவுடன்.. செம அப்டேட்!

news

2025ம் ஆண்டின் முதல் அதிரடி.. தடாலடியாக தனது பெயரை மாற்றினார் எலான் மஸ்க்!

news

Happy New Year 2025.. பிறந்தது 2025.. இந்தியா முழுவதும் ஆட்டம் பாட்டத்துடன்.. தெறிக்க விட்ட மக்கள்

news

மார்கழி 18 - திருவெம்பாவை 18 - அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்

news

மார்கழி 18 - ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 18 - உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்

news

2025 வருக வருக.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

news

திருவள்ளுவரைக் கொண்டாடிக் கொண்டே இருப்போம்.. அது நமது கடமை.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

Happy Pongal மக்களே.. ஜனவரி 3 முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன் விநியோகம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்