தமிழில் பெயர் பலகை வைக்காதவர்களுக்கு.. தண்டத்தை அதிகரிங்க.. ராமதாஸ் ஆவேசம்

Sep 02, 2023,02:59 PM IST
சென்னை:  தமிழில் பெயர்ப்பலகை வைக்காத கடைகளுக்கான தண்டத்தை பல மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் தமிழக அரசால் வகுக்கப்பட்டுள்ள விதிகளின்படி தமிழுக்கு முதன்மையிடம் அளித்து பெயர்ப்பலகைகளை அமைக்காத கடைகளுக்கு இதுவரை ரூ.50 மட்டுமே தண்டம் பெறப்பட்டது; இப்போது தண்டத்தொகையை ரூ.2,000 ஆக உயர்த்தி  அரசாணை பிறப்பிக்கப்படவுள்ளது என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருகிறது. தமிழக அரசின்  இந்த நிலைப்பாடு வரவேற்கத்தக்கது.



தமிழ்நாட்டில் உள்ள கடைகளின் பெயர்ப்பலகைகள் தமிழ் மொழியில் தான் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் பாமக பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளது. இப்போது இந்தக் கோரிக்கை உள்ளிட்ட பல கோரிக்கைகளை  வலியுறுத்தி தான் தமிழைத் தேடி.... என்ற பெயரிலான  8 நாள்  பரப்புரைப் பயணத்தை சென்னை முதல் மதுரை வரை மேற்கொண்டேன். அதன் பிறகு தான் தமிழ்ப் பெயர்ப்பலகைகள் சிக்கலில் தமிழக அரசு ஆர்வம் காட்டத் தொடங்கியது. இது ஒரு நல்லத் தொடக்கம். அன்னைத் தமிழை காக்க நாம் இன்னும் வெகு தொலைவு பயணிக்க வேண்டும்.

தமிழில் பெயர்ப்பலகை அமைக்காத கடைகளுக்கு ரூ.2000 அபராதம் விதிக்கும் திட்டத்தை பாவ மன்னிப்பு திட்டமாக வணிகர்கள் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது; ரூ.2000 தண்டம் செலுத்தி விட்டால் அதன் பின்னர் ஆங்கிலத்திலோ, பிற  மொழிகளிலோ பெயர்ப்பலகைகளை அமைத்துக் கொள்ளலாம் என்று நினைத்து விடக்கூடாது.

இது தொடர்பாக பிறப்பிக்கப்படவுள்ள அரசாணையில், ஆணை வெளியிடப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் பெயர்ப்பலகைகள் வைக்காவிட்டால், ரூ.2000 தண்டம் வசூலிக்கப்படும்;  அபராதத்தை செலுத்தி விட்டு,  பெயர்ப்பலகைகள் மாற்றப்படவில்லை  என்றால் அந்தக் கடைகளுக்கு முதல் முறை  ரூ.5000, அடுத்த முறை ரூ.10,000 என தண்டம்  அதிகரிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட வேண்டும். அதன் மூலம் அரசாணை பிறப்பிக்கப்பட்டதிலிருந்து  3  மாதங்களுக்குள் அனைத்து கடைகளின்  பெயர்ப்பலகைகளும் தமிழில் மாற்றப்பட வேண்டும். 

தமிழைத்தேடி  பயணம் தொடங்குவதற்கு முன்பாகவும், பயணத்தின் போதும், அதற்கு பிறகும் பல்வேறு தருணங்களில் நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று,  பெயர்ப்பலகைகளை தாங்களாகவே தமிழில் மாற்றுவதாக வணிகர் அமைப்புகள் உறுதியளித்தன.  பல வணிகர்கள் கடைகளில் பெயர்ப்பலகைகளை மாற்றி அமைத்துள்ளனர்.  முன்பு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் அரசாணை வெளியிடப்படும் வரை காத்திருக்காமல் வணிகர்களே தங்களது கடைகளின் பெயர்ப்பலகைகளை  தமிழில் மாற்றியமைத்து அன்னை தமிழுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

சிங்கம்-கழுகு கூட்டணியா?.. சிலாகிக்கும் நா.த.க.. சீமான் சொன்ன பதில்.. ரஜினியுடன் சந்திப்பு ஏன்?

news

ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

news

Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்