சென்னை: பாமக புத்தாண்டு பொதுக்குழு கூட்டம் புதுச்சேரியில் வரும் 28ம் தேதி நடைபெறும் என அக்கட்சித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
2025ம் ஆண்டு மேற்கொள்ள வேண்டிய செயல்திட்டங்கள் குறித்து இதில் ஆலோசனை செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் "2024 ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்; 2025 ஆம் ஆண்டை வரவேற்போம்" என்ற தலைப்பில் டிசம்பர் 28ஆம் தேதி நடைபெற உள்ளது.
புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில், சுங்கச்சாவடி அருகில் உள்ள சங்கமித்ரா திருமண அரங்கத்தில் 28.12 .2024 சனிக்கிழமை காலை 10 மணிக்கு புத்தாண்டு பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெறும். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையேற்பார்.
கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே. மணி, பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா ஆகியோர் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளும், பாமகவின் பல்வேறு அணிகள், வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட துணை அமைப்புகள் ஆகியவற்றின் அனைத்து நிலை நிர்வாகிகளும், சிறப்பு அழைப்பாளர்களும் பங்கேற்பர்.
இந்தக் கூட்டத்தில் கட்சி நிரகவாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுடன் மருத்துவர் ராமதாஸ் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வார். 2024ம் ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட கட்சி மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்படுவதுடன், 2025 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணித்திட்டங்கள் குறித்து இந்தப் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தில் விரிவாக விவாதித்து முடிவு எடுக்கப்படவுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அடடா மழைடா அடை மழைடா.. சென்னை, புறநகர்களில் காலை முதல் விடாமல் கொட்டித் தீர்க்கும் மித மழை..!
அம்பேத்கர் அம்பேத்கர்.. உள்ளமும் உதடுகளும் மகிழ உச்சரித்துக் கொண்டே இருப்போம்.. தவெக தலைவர் விஜய்
அமித்ஷா பேசியது பாஜகவிற்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும்.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
அம்பேத்கரை எப்படியெல்லாம் காங்கிரஸ் அவமதித்தது?.. பட்டியலிட்ட பிரதமர் நரேந்திர மோடி!
Samai Pongal and Ven Poosani paruppu sambar.. டேஸ்ட்டியான சாமை பொங்கல் + வெண்பூசணி பருப்பு சாம்பார்!
Pongal.. சிறப்பு பொங்கல் தொகுப்பு விற்பனை.. இன்று முதல்.. ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில்!
புதுச்சேரியில்.. டிசம்பர் 28ம் தேதி பா.ம.க பொதுக்குழு கூட்டம்.. டாக்டர் அன்புமணி ராமதாஸ்
புஷ்பா-2.. ஜாமினை ரத்து செய்யக் கோரி.. சுப்ரீம் கோர்ட்டை அணுகும் போலீஸ்.. அல்லு அர்ஜூனுக்கு சிக்கல்
{{comments.comment}}