சென்னை: டாக்டர் ராமதாஸின் அதிரடி நடவடிக்கையால் பாமகவுக்குள் பெரும் பூகம்பம் வெடித்துள்ளது. இதன் பின்விளைவுகள் எப்படி இருக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசியல் மீண்டும் ஒரு பரபரப்பான நிகழ்வைக் கண்டு வருகிறது. ஜெயலலிதா மறைவு, அதன் பிறகு நடந்த நிகழ்வுகள் அனைவரும் அறிந்ததே. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக பல்வேறு மாற்றங்களை கண்டு இன்று மிகவும் பலவீனமான ஒரு நிலையில் காட்சியளிக்கிறது. பல தலைவர்கள் அதிலிருந்து பிரிந்து போய்விட்டனர். இன்று தொடர்ந்து தோல்விகளை மட்டுமே அதிமுக சந்தித்து வருகிறது.
ஒரு காலத்தில் மறைந்த கலைஞர் கருணாநிதிக்கு கடுமையான சவாலாக விளங்கிய கட்சி அதிமுக. எம் ஜி ஆர் இருந்த போதும் சரி ஜெயலலிதாவின் காலத்திலும் சரி, தொடர்ந்து முக்கியமான தோல்விகளை திமுகவுக்கு அளிக்க அதிமுக தவறியதில்லை. தமிழ்நாட்டு அரசியலின் களம் திமுக மற்றும் அதிமுக என்ற இருமுனையில் மட்டுமே இருந்து வந்தது. இப்போதும் அந்த நிலையை தொடர்கிறது என்றாலும் கூட திமுக பெற்றுள்ள பலம் முன்பை விட அதிகமாக இருக்கிறது. திமுக அதிமுகவை விட பல மடங்கு பலத்துடன் இன்று காட்சியளிப்பது யாரும் மறுக்க முடியாது.
மறுபக்கம் அதிமுக மிகப் பெரும் தோல்விகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது. சில தேர்தல்களை புறக்கணிக்கும் அளவுக்கு அந்த கட்சி பலவீனமாக இருப்பது அந்த கட்சியின் தொண்டர்களுக்கே பெரும் சோகமான ஒரு விஷயமாகும். இன்று இன்னும் ஒரு அரசியல் கட்சி பலவீனமான அல்லது பிளவுபடும் நிலையை நோக்கி செல்ல தொடங்கியுள்ளது. அதுதான் பாமக. பாமக தொடங்கப்படுவதற்கு முன்பு வன்னியர் சங்கத்தில் தீவிரமாக களமாடி வந்தவர் டாக்டர் ராமதாஸ். அவரது அயராத உழைப்பு, கடுமையான முயற்சிகள், கிராமம் கிராமமாக சென்று அவர் மேற்கொண்ட திண்ணைப் பிரச்சாரத்தால் அவருக்குக் கிடைத்த செல்வாக்கு அளப்பறியது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கே கடும் சவாலாக திகழ்ந்தவர் டாக்டர் ராமதாஸ்.
பின்னாளில், பாட்டாளி மக்கள் கட்சி உருவானது. வட மாவட்டங்களில் மிகப்பெரிய சக்தியாக பாமக ஒரு காலத்தில் திகழ்ந்தது. இப்போதும் வட மாவட்ட முக்கிய அரசியல் சக்தியாக பாமக இருந்தாலும் கூட முக்கியமான வெற்றிகளை பெற அது தவறி வருகிறது. இதற்கு காரணம் பாமகவின் செயல்பாடுகளில் காணப்படும் ஒரு விதமான தொய்வு. பாமகவின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ் பல்வேறு தலைவர்களை தனது கட்சியின் தலைமைப் பொறுப்பில் ஈடுபடுத்தி செயல்பட வைத்தார். இதெல்லாம் அவர் ஆக்டிவாக செயல்பட்ட காலத்தில் கரெக்டாக இருந்தது.
ஜி.கே.மணி காலம் வரை பாமகவின் செயல்பாடுகள் சற்று சிறப்பாக இருந்தது என்று சொல்ல வேண்டும். அதன் பிறகு 2022 ஆம் ஆண்டு பாமகவின் புதிய தலைவராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் நியமிக்கப்பட்டார். அன்புமணியின் வரவுக்கு பின்னர் பாமகவின் செயல்பாடுகள் அதன் போக்கில் பல மாற்றங்கள் காணமுடிந்தது. ஒரு ஜாதி கட்சியாக மட்டுமே அறியப்பட்ட பாமகவை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தீவிரம் காட்டினார். அதற்கு ஏற்ப அவர் செயல்பாடுகளில் முன்னெடுத்தார். வெறும் ஜாதி கட்சியாக மட்டும் இருக்கக் கூடாது என்பது அவரது எண்ணமாக இருந்தது. அதற்கு காரணம் அவர் அரசியல் செய்தது டெல்லியில், டாக்டர் ராமதாஸின் அரசியல் தமிழ்நாட்டில். எனவே அவரவர் சூழலுக்கு ஏற்ற அரசியலை அவர்கள் செய்ய முனைந்தனர். இதன் காரணமாக இருவருக்குள்ளும் பல்வேறு முட்டல் மோதல்கள் வெடித்தன.
ராமதாஸின் செயல்பாடுகள் ஓல்ட் ஸ்கூல் என்ற வகையில் இருப்பதாக அன்புமணி உணர்ந்ததால் தனது போக்கில் தன்னை விடுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அன்புமணியின் போக்கில் கட்சி போனால் அது இருக்கும் வாக்கு வங்கியும் இழக்க நேரிடும் என்பது டாக்டர் ராமதாஸின் எண்ணம். காரணம் வன்னியர் சமுதாயத்தினர் தான் பாமகவின் முதன்மையான வாக்கு வங்கி. அதிலிருந்து விலகும் போது நிச்சயம் கட்சி பலவீனப்படும் என்று ராமதாஸ் கருதினார். இதற்கு நேர்மாறான எண்ணத்தில் இருந்தவர் டாக்டர் அன்புமணி. டெல்லி அரசியலே மையப்படுத்தி அவர் பாஜகவுடன் கூட்டணி வைக்க அதிகம் விரும்பினார். மறுபக்கம் அதிமுகவுடன் கூட்டணி வைக்க ராமதாஸ் விரும்பினார்.
இங்கும் அவர்களுக்கு இடையே ஒற்றுமை ஏற்படவில்லை. கடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியை ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்திய நிலையில் பாஜக பக்கம் போவதில் பிடிவாதம் காட்டி அதில் வெற்றியும் பெற்றார் அன்புமணி ராமதாஸ். இருப்பினும் தேர்தலில் மிகப்பெரும் தோல்வியே கிடைத்தது. தனது மனைவி சௌமியா அன்புமணியை தர்மபுரியில் நிறுத்தியும் கூட வெல்ல முடியாமல் போனது அன்புமணிக்கே கூட கடும் விரக்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் ராமதாஸின் பேரன் முகுந்தன் ரூபமாக புதிய பஞ்சாயத்து வெடித்து பின்னர் அது அமைதியானது. தற்போது புதிய திரியை அவர் பற்ற வைத்துள்ளார்.
தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை முக்கிய கட்சியான அதிமுக பலவீனப்பட்டு நிற்கிறது. இந்த நிலையில் பாமகவும் பலவீனப்பட்டால் அல்லது பிளவுபட்டால் அது அக்கட்சிக்கு நல்லதல்ல என்று தொண்டர்கள் கவலைப்படுகிறார்கள். அன்புமணியும், ராமதாஸும் வெளிப்படையாக பேசி தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால் பிளவு வரைக்கும் போய் விட்டால் பல வருடங்களாக கடுமையாக உழைத்து செங்கல் செங்கல்லாக பார்த்துப் பார்த்து உருவாக்கிய பாமகவின் கோட்டை தகர்வதை யாராலும் தடுக்க முடியாது என்றும் அவர்கள் கவலையுடன் தெரிவிக்கிறார்கள்.
வச்சு செய்யும் குட் பேட் அக்லி.. டிராகன் வசூலைத் தாண்டியது.. தியேட்டர்களில் தொடர்ந்து செம கூட்டம்!
அதிக வயதில் ஆட்ட நாயகன் விருதை வென்ற மகேந்திர சிங் தோனி
அமர்நாத் யாத்திரைக்கான.. முன்பதிவு தொடங்கியது.. 533 வங்கிக் கிளைகளில் சிறப்பு ஏற்பாடு
பாமகவில் உட்கட்சி பூசல்கள் சரியாகி விட்டது.. கௌரவத் தலைவர் ஜி கே மணி தகவல்
கோடை விடுமுறை... 6 வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!
பழம்பெரும் கோவில்கள்.. வீரத்தின் விளை நிலம்.. கலைகளின் தாயகம்.. நம் தாய்த் திரு தமிழ் நிலம் (2)
தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில்..பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு..!
அனுமதி இல்லாமல் பாட்டை பயன்படுத்திய.. அஜித் பட தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ்
நெல்லையில்.. சக மாணவரை வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது? டாக்டர். அன்புமணி
{{comments.comment}}