சென்னை: எல்லோரும் உங்களிடம் அதிக அளவிலான ஆப் பிரேக்கை எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் நீங்களோ கேரம் பால் பவுலிங்கை வீசி எல்லோரையும் அதிர வைத்து விட்டீர்கள் என்று ஆர். அஸ்வினுக்கு எழுதிய நீண்ட கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடி நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.
இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அனைவரையும் அதிர வைத்து விட்டார். அவரது ஓய்வு குறித்த விவாதங்கள் இன்னும் தொடர்கின்றன.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அஸ்வினுக்கு நீண்டதொரு கடிதத்தை எழுதியுள்ளார். அதில் அஸ்வினை வெகுவாக பாராட்டியுள்ளார் பிரதமர் மோடி. பிரதமர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:
அஸ்வின், நல்ல நலத்துடனும், உத்வேகத்துடனும் இருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நீங்கள் அறிவித்தது, இந்தியாவில் உள்ள ரசிகர்களை மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் உள்ள உங்களது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அனைவரும் அதிக அளவிலான ஆப் பிரேக் பவுலிங்கை உங்களிடம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது நீங்கள் கேரம் பால் பவுலிங்கை வெளிப்படுத்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டீரர்கள். இந்த முடிவு மிகவும் கடினமானது என்பது எனக்குத் தெரியும். அதிலும் இப்போது இந்தியாவுக்காக ஆடிக் கொண்டிருந்த சமயத்தில் இப்படிப்பட்ட முடிவை எடுப்பது கடினமானது.
இத்தனை காலம் கடினமாக உழைத்ததற்கும், இந்திய அணியை உயர்ந்த இடத்தில் வைக்க உதவியதற்கும், உங்களது அருமையான கிரிக்கெட் சேவைக்காகவும் எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்
நீங்கள் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து விடை பெறுவதால் நீங்கள் அணிந்த 99 ஜெர்சியை அனைவரும் மிஸ் செய்வார்கள். நீங்கள் பந்து வீச வரும்போது எப்படியெல்லாம் மேஜிக் செய்வீர்களோ அதை கிரிக்கெட் காதலர்கள் மிஸ் செய்வார்கள். எதிராளிகளை வீழ்த்த நீங்கள் வீசும் ஒவ்வொரு பந்தும் ஒரு வலைப் பின்னல் போலத்தான் இருக்கும். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை உணர்வே பேட்ஸ்மேன்கள் திணறுவார்கள். உங்களது புதுப் புது உத்திகள் அவர்களை திணறடிப்பதை நாங்கள் பார்த்து வியந்துள்ளோம்.
நீங்கள் வீழ்த்தியுள்ள 765 சர்வதேச விக்கெட்டுகள் ஒவ்வொன்றும் சிறப்பானது. டெஸ்ட் போட்டிகளில் அதிக அளவிலான தொடர் நாயகன் பட்டத்தை வென்ற சாதனையை நீங்கள்தான் வைத்துள்ளீர்கள். அதுவே இத்தனை காலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் உங்களையும், இந்திய அணியையும் உயர்ந்த இடத்திற்குக் கொண்டு சென்றதற்கான அடையாளமாகும்.
உங்களது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே இளம் வீரராக நீங்கள் 5 விக்கெட்களை வீழ்த்தினீர்கள். 2011 உலகக் கோப்பை போட்டியை வென்ற இந்திய அணியில் முக்கியப் பங்கு வகித்தீர்கள். 2013 சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் இறுதிப் போட்டியில் கடைசி ஓவரில் அருமையான பந்து வீசி இந்தியாவை வெற்றி பெற வைத்தீர்கள். இந்திய அணியின் மிக முக்கிய வீரராக உருமாறியிருந்தீர்கள். அதன் பின்னர் இந்திய அணியின் மூத்த வீரராக இந்தியாவின் பல்வேறு முக்கியத் தருணங்களில் அணிக்குத் துணை நின்றீர்கள். ஐசிசியின் சிறந்த கிரிகெட் வீரராக தேர்வானீர்கள். பல்வேறு சர்வதேச பாராட்டுக்களையும் கெளரவங்களையும் பெற்றுள்ளீர்கள்.
ஒரே போட்டியில் சதம் அடித்தும், 5 விக்கெட் வீழ்த்தியும் பலமுறை சாதனை படைத்து நீங்கள் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் என்பதை நிரூபித்துள்ளீர்கள். 2021 சிட்னி டெஸ்ட் போட்டியில் உங்களது துணிச்சல் நிறைந்த பேட்டிங்கின் மூலமாக நீண்ட காலத்திற்கு இந்திய ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் மிதக்க வைத்தீர்கள். அந்த பேட்டிங் இந்தியாவைக் காப்பாற்ற உதவியதை ரசிகர்கள் மறக்க மாட்டார்கள்.
சிலரை சில அருமையான ஷாட்டுகளுக்காக மக்கள் நினைவு கூர்வார்கள். ஆனால் 2022 உலக டி20 கோப்பைப் போட்டியின் முக்கியப் போட்டியில் உங்களது அருமையான பேட்டிங் இந்தியாவை வெற்றி பெற வைத்தது. பவுலிங்கிலும் நீங்கள் காட்டிய பிரமாதமான திறமையை ரசிகர்கள் என்றென்றும் நினைவு கூருவார்கள்.
எப்படிப்பட்ட சூழலிலும் நீங்கள் அணியின் மீது காட்டிய சின்சியாரிட்டியும், கமிட்மென்ட்டும் ஆழமானது, உண்மையானு. தென் ஆப்பிரிக்காவுடன் நடந்த தொடரின்போது உங்களது தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் கூட அவரை பார்த்து விட்டு மீண்டும் விளையாட வந்ததை இந்தியா மறக்காது. சென்னையில் வெள்ளம் பாதித்தபோது, உங்களது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முடியாத நிலையிலும் கூட விளையாட்டில் நீங்கள் காட்டிய சிரத்தை மறக்க முடியாதது.
உங்களது கெரியரை உற்று நோக்கினால் அதில் விட்டுக் கொடுக்கும் தன்மையையும், எல்லோருடனும் அனுசரித்துக் கொண்டு போகும் பாங்கையும் உணர முடியும். எல்லா வகையான கிரிக்கெட்டுக்கும் ஏற்றார் போல உங்களை தகவமைத்துக் கொண்ட ஜாம்பவான் நீங்கள். அணிக்கு ஒரு சொத்தாக இருந்தவர் நீங்கள். ஒரு வேளை நீங்கள் என்ஜீனியரிங் படித்தவர் என்பதாலோ என்னவோ எல்லாவற்றையும் கச்சிதமாக மாற்றிக் கொள்ள முடிந்ததா என்று நானே ஆச்சரியப்பட்டுள்ளேன். உங்களது புத்திசாலித்தனமான கிரிக்கெட் திறமையை பலரும் பாராட்டியுள்ளனர். அந்த அறிவுத்திறன் வருங்கால கிரிக்கெட் வீரர்களுக்கும், எதிர்காலத் தலைமுறையினருக்கும் பயன்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
அன்புடனும், நகைச்சுவையுடனும் நீங்கள் பேசும் உரையாடல்களை ரசிகர்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர். கிரிக்கெட் போட்டிகளின்போது அவ்வப்போது நீங்கள் சமூக வலைதளங்களில் வெளியிடும் கருத்துக்கள், குட்டிக் கதைகள் தொடரும் என்று நம்புகிறேன்.
கிரிக்கெட்டின் தூதுவராக நாட்டையும், உங்களது குடும்பத்தையும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள். இந்த சந்தர்ப்பத்தில் உங்களது பெற்றோர், மனைவி ப்ரீத்தி, உங்களது மகள்கள் ஆகியோரை பாராட்ட விரும்புகிறேன். அவர்களது தியாகமும், ஆதரவும்தான் உங்களை மிகப் பெரிய கிரிக்கெட் ஜாம்பவாக வளர உதவி செய்துள்ளது, நல்ல மனிதராக விளங்க உதவி புரிந்துள்ளது. அவர்களுடன் அதிக நேரத்தை இனி செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
உங்களது எதிர்காலம் மேலும் சிறப்பாக அமைய வேண்டும் என்று மீண்டும் இதயப்பூர்வமாக வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஆப் பிரேக்கை எதிர்பார்த்தால்.. கேரம் பாலை போட்டு விட்டீர்களே.. அஸ்வினுக்கு பிரதமர் மோடி கலகல கடிதம்!
200 இடங்களில்.. ஏன் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற இன்றே புறப்படுவீர்.. திமுக செயற்குழு
பிரதமர் நரேந்திர மோடிக்கு குவைத் நாட்டின் The Order Of Mubarak Al Kabeer உயரிய விருது!
புஷ்பா 2 படம் பார்க்க வந்த போது சிக்கிய கடத்தல்காரன்.. Smuggling டெக்னிக்ஸ் கத்துக்க வந்திருப்பாரோ!!
ஆங்கில புத்தாண்டு 2025 ராசிபலன் : கும்பம் ராசிக்காரர்களே.. அமைதியாக இருந்து காரியம் சாதிப்பீர்கள்
உன்னை தினம் தேடும் தலைவன்.. விஜயகாந்த் மீது காதல் வந்த அந்த ஒரு நிமிடம்.. பிரேமலதா சொன்ன ரகசியம்!
தாய் மனம் (சிறுகதை)
மார்கழி 8 திருவெம்பாவை பாசுரம் 8.. கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
மார்கழி 8 ஆண்டாளின் திருப்பாவை பாசுரம் 8.. கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு!
{{comments.comment}}