நிறைவடைந்தது.. பிரதமர் நரேந்திர மோடியின்.. குமரி முனை தொடர் தியானம்.. திருவனந்தபுரம் கிளம்பினார்!

Jun 01, 2024,04:16 PM IST

கன்னியாகுமரி: கன்னியாகுமரி, விவேகானந்தர் பாறையில் கடந்த மூன்று நாட்களாக தியானத்தை மேற்கொண்டு வந்த பிரதமர் நரேந்திர மோடி இன்றுடன் தியானத்தை முடித்துக் கொண்டு  திருவனந்தபுரத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.


மூன்று நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் மாலை கன்னியாகுமரி வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்த பகவதி அம்மனை தரிசனம் செய்துவிட்டு படகு மூலம் விவேகானந்தர் பாறைக்கு சென்று தியானத்தை தொடங்கினார். கடந்த 18 மணி நேரமாக தியானம் செய்து வரும் பிரதமர் நரேந்திர மோடி அவ்வப்போது தியானத்தை விட்டு வெளியே வந்து சூரிய நமஸ்காரம் மற்றும் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.




காவி உடையுடன், கழுத்தில் ருத்ராட்ச மாலை, நெற்றியில் திருநீர் பட்டை அணிந்து கொண்டு நீர் ஆகாரம் மட்டுமே அருந்தி தியானத்தை செய்து வருவதாக தகவல் வெளியானது. இதனுடன் மௌனம் விரதமும் இருந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், எதிர் கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வந்தனர்.


இந்த சூழ்நிலையில் இன்று மாலை 3: 25 மணி அளவில் விவேகானந்தர் பார்வையை விட்டு வெளியே வந்து திருவள்ளுவர் சிலைக்கு வந்தார் பிரதமர் மோடி. அங்கு மலர் தூவி  வள்ளுவருக்கு அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து படகுமூலம் கடற்கரைக்கு வந்து,  அங்கிருந்து ஹெலிகாப்டர் தளத்திற்குச் சென்று ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றார். திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்ல இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.




கடந்த இரண்டு நாட்களாக கன்னியாகுமரியை போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்திருந்தது. பிரதமர் தொடர்ந்து தியானத்தில் ஈடுபட்டு வந்ததால், கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்கு சுற்றுலா பயணிகள் அவ்வப்போது தடுக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது பிரதமர் கிளம்பிச் சென்று விட்டதால், சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீங்கியுள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்