அபுதாபி பிரமாண்ட இந்துக் கோவில்.. முஸ்லீம் நாடுகளில் முதல் கோவில்.. இன்று திறக்கிறார் பிரதமர் மோடி

Feb 14, 2024,10:09 AM IST

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் மிகப் பெரிய இந்து  கோயில் கட்டப்பட்டுள்ளது. அந்தக் கோவிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்.


அயோத்தியில் மிகப் பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்ட ராமர் கோயில் திறப்பு விழா கோலாகலமாக சமீபத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய இந்து கோவில்  இன்று திறக்கப்பட உள்ளது. இந்த கோயிலையும் பிரதமர் மோடியே திறக்கவுள்ளார்.


திறப்பு விழாவை முன்னிட்டு கோயிலுடன் மூலக்கடவுள் சுவாமி நாராயணன் சிலைக்கு பூஜை செய்யப்பட்டு வருகிறது. அமீரகத்தில் வசிக்கும் இந்திய இந்துக்களுக்காக மோடியின் வேண்டுகோளை ஏற்று அபுதாபியில் இந்து கோயில் கட்டுவதற்கு அமீரக அரசு அனுமதி அளித்தது. 


குஜராத் அமைப்பு கட்டிய கோவில்




ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் கடந்த 2015 ஆம் ஆண்டு இந்தக் கோயில் கட்டுவதற்காக நில ஒதுக்கீடு செய்தார். இந்த கோவில் கட்டமான பணிகளுக்கு குஜராத்தின் அகமதாபாத்தை சேர்ந்த போச்சன்வாசி ஸ்ரீ அக்ஷார் புருஷோத்தம் சுவாமி நாராயண் சன்ஸ்தா என்ற ஆன்மீக அமைப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டது. 2019ம் ஆண்டு தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் தொடர்ந்து மும்முரமாக நடைபெற்று வந்தன.


இந்த கோவில் வளாகம் 27 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.  கோவில் கட்டிடம் மட்டும் 55 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலை கட்டுவதற்கு ரூ.700 கோடி செலவாகியுள்ளது. அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் சையது அல் நஹ்யான் 13.5 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக கொடுத்துள்ளார். கோவிலில் உள்ள 7 கோபுரங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தை குறிக்கிறது. இந்த கோவிலில் இரும்பு மற்றும் கம்பிகள் எதுவும் பயன்படுத்தவில்லையாம். இந்த கோவிலின் ஆயுட்காலம் சுமார் 1000 ஆண்டுகள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


ராமாயணம், சிவபுராணம் சிற்பங்கள்


  


இந்தக் கோயில் கட்டமானத்தில் வெள்ளை பளிங்கு கற்கள் மற்றும் இளஞ்சிவப்பு மணற்கற்கலால் பாரம்பரிய கலைநயத்துடன் மிகவும் நேர்த்தியாக கட்டப்பட்டுள்ளது. கோவிலின் சுவர்களில் உள்ள அழகிய சிற்பங்கள் ராமாயணம், சிவபுராணம் மற்றும் ஜகன்னாதர் யாத்திரையின் கதைகளை சித்தரிக்கின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தின் வெப்பத்தை தாங்கக்கூடிய இத்தாலிய பளிங்கு கற்கள் மற்றும் ராஜஸ்தான் மணல் கற்கள் மூலம் கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயில் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் சென்சார்கள் நிறுவப்பட்டுள்ளன.  இந்தக் கோயிலில் மொத்தம் 42 தூண்கள் நிறுவப்பட்டுள்ளன.


அவற்றில் தெய்வங்கள், மயில்கள், யானைகள், ஒட்டகங்கள், சூரியன், சந்திரன், மாணவர்கள், இசைக்கருவி வாசிக்கும் சிற்பங்கள் உள்ளிட்ட பல்வேறு அழகு மிகுந்த சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த கோயில் சுமார் 27 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது. இது இந்தியாவிற்கு வெளியே உள்ள மிகப்பெரிய இந்து கோயில் ஆகும். ராஜஸ்தான் மற்றும் குஜராத்தை சேர்ந்த சுமார் 2000க்கும் மேற்பட்ட சிற்பிகள் மற்றும் தொழிலாளர்கள் கோயிலை கட்டுவதற்காக மூன்று ஆண்டுகள் கடுமையாக உழைத்து உள்ளனர்.


ஒரே நேரத்தில் 5000 பேர் கூடலாம்




கோயில் வளாகத்தில் சுற்றுலா மையம் பிரார்த்தனை கூட நிகழ்ச்சி அரங்கம், குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானம், குடிநீர், உணவு, புத்தகங்கள், பரிசு பொருட்கள், கடை என அனைத்தும் இடம்பெற்றுள்ளன. 5 ஆயிரம் பேர் நிகழ்ச்சிகளை ஒரே நேரத்தில் பார்வையிடும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 1200 கார்கள் மற்றும் 30 பஸ்கள் நிறுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக ஹெலிகாப்டர் இறங்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.


இந்த கோவிலின் கும்பாபிஷேகம் மற்றும் சிலைகளுக்கு பிரதிஷ்டை செய்யும் விழா இன்று காலை நடக்கிறது. மாலை கோவில் திறப்பு விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு கோவிலை திறந்து வைக்கிறார். பொதுமக்கள் மார்ச் ஒன்றாம் தேதி முதல் கோவிலை பார்வையிடலாம் என அபுதாபி பிஏபிஎஸ் அமைப்பு அறிவித்துள்ளது. இதற்காக அந்த அமைப்பின் இணையதளம் மற்றும் வெப்சைட்டில் ஹார்மோன் என்று செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்