வேலையெல்லாம் கரெக்டா நடக்குதா?.. "புது பார்லிமென்ட்"டுக்கு திடீர் விசிட் அடித்த மோடி!

Mar 30, 2023,09:25 PM IST

டெல்லி: புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற வளாகத்திற்கு  திடீரென பிரதமர் நரேந்திர மோடி விசிட் அடித்து நடந்து வரும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


சென்டிரல் விஸ்டா என்ற பெயரில் புதிய நாடாளுமன்ற வளாகம் பிரமாண்டமான முறையில் பெரும் பொருட் செலவில் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த கட்டுமானப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.



தற்போது கட்டுமானப்  பணிகள்  கிட்டத்தட்ட முடிவுறும் நிலைக்கு வந்து விட்டன. கடைசிக் கட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்த கட்டுமானத்தை டாடா புராஜக்ட்ஸ் லிமிட்டெட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. மிகப் பெரிய நாடாளுமன்ற  அரங்கம், நூலகம், பிரதமர் அலுவலகம், அமைச்சரவை செயலகம், இந்தியா ஹவுஸ் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம், பல்வேறு கமிட்டிகளுக்கான அறைகள், டைனிங் அறைகள், மிகப் பெரிய பார்க்கிங் என சகல வசதிகளுடன் அதி நவீனமாக இது உருவாகி வருகிறது.



உலகத் தரம் வாய்ந்த நாடாளுமன்ற வளாகமாக இது உருவெடுத்துள்ளது. இந்த நிலையில் கட்டுமானப் பணிகளின் கடைசிக் கட்ட நிலவரத்தை நேரில் அறிய விரும்பினார் பிரதமர் நரேந்திர மோடி. இதையடுத்து திடீரென அவர் புதிய நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்தார். அவருடன் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவும் வந்திருந்தார். பெரிய  அளவில் கூட்டம் சேர்க்காமல் சிம்பிளாக வந்த பிரதமரைப் பார்த்து கட்டுமானப் பணியில் கவனமாக இருந்த பொறியாளர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் ஆச்சரியமடைந்தனர்.



கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அந்த இடத்தில் இருந்த பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு பணிகளையும் நேரில் பார்த்து ஆய்வு செய்தார். சந்தேகங்களையும் அவர் கேட்டார். பின்னர் ஊழியர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். 


கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலேயே கட்டுமானப் பணிகள் முடிவடைந்திருக்க வேண்டும். ஆனால் சற்று தாமதமாகி விட்டது. ஆனால் விரைவில் புதிய வளாகம்  திறந்து வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

அதிகம் பார்க்கும் செய்திகள்