சென்னை: வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைப்பதற்காக சென்னைக்கு வர இருந்த பிரதமர் நரேந்திர மோடியின் பயணத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் பாஜக மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதில் மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி தனது முதல் வெளிநாட்டு பயணமாக ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்றார். இந்த மாநாடு இத்தாலியில் நடைபெற்றது. இதற்காக இத்தாலி நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார்.
இதற்கிடையே சென்னை டூ நாகர்கோவில் மற்றும் மதுரை - பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி தமிழ்நாடு வரத் திட்டமிட்டிருந்தார். இதற்காக வரும் 20ம் தேதி சென்னைக்கு வருகை தர இருந்தார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இதுதொடர்பான நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக ரயில்வே அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
பேசின்பாலம் யார்ட்டில் வந்தே பாரத் ரயில் பராமரிப்பு பணிக்காக அடிக்கல் நாட்டுதல், ஆரல்வாய்மொழி டூ நாகர்கோவில், மேட்டுப்பாளையம் டூ திருநெல்வேலி, மற்றும் நாகர்கோவில் சந்திப்பு டூ கன்னியாகுமரி இடையே கட்டி முடிக்கப்பட்ட இரட்டை பாதை திட்டத்தை திறந்து வைத்தல், போன்றவற்றை காணொளி வாயிலாக திறந்து வைக்க இருந்தார்.
இந்த நிலையில் வந்தே பாரத் ரயில் திட்டத்தை திறந்து வைப்பதற்காக தமிழ்நாடு பயணமாக சென்னைக்கு வருகை தர இருந்த பிரதமர் நரேந்திர மோடியின் பயணத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்குரிய மாற்று தேதி அறிவிக்கப்படும் என கரு நாகராஜன் தெரிவித்துள்ளார். மறு தேதி அறிவித்த பிறகு திட்டமிட்டபடி சிறப்பான வரவேற்புக்கு ஏற்பாடு செய்வோம் என தமிழக பாஜக துணை தலைவர் கரு. நாகராஜன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!
தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}