பெங்களூரைக் கலக்கிய பிரதமர் மோடி.. மெட்ரோ ரயிலில் பயணம்

Mar 25, 2023,10:10 AM IST
பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடி இன்று கர்நாடகத்தில் இரு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பெங்களூரு வந்த அவர் அங்கு புதிய வழித்தடத்தைத் தொடங்கி வைத்து மெட்ரோ ரயிலிலும் பயணம் செய்தார்.

கர்நாடகத்தில் சட்டசபைத் தேர்தல்  நெருங்கி வருகிறது. இதனால் தலைவர்களும் அங்கு குவிய ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக பாஜக தலைவர்கள் அடுத்தடுத்து அங்கு வந்து செல்கின்றனர். நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்திருந்தார். இந்த நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார்.




காடுகோடி முதல் கிருஷ்ணராஜபுரம் வரை அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் பாதையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.  ரூ. 4250 கோடி மதிப்பில், 13.71  கிலோமீட்டர் தொலைவில்   அமைக்கப்பட்ட ரயில் பாதை இது. பெங்களூரு மெட்ரோவின் 2வது பகுதியில் இது வருகிறது. இந்தப் பாதையில் மொத்தம் 12 ரயில் நிலையங்கள் உள்ளன. காடுகோடி மெட்ரோ ரயில் நிலையத்தில்  தொடக்க விழாநடைபெற்றது.

மெட்ரோ வழித்தடத்தைத்  தொடங்கி வைத்த பின்னர் டிக்கெட் வாங்கிக் கொண்டு ரயிலில் பயணம் செய்தார் பிரதமர் மோடி. 

இந்த விழாவுக்குப் பின்னர் பிரதமர் மோடி சிக்கப்பல்லபூர் சென்ற பிரதமர் மோடி அங்கு ஸ்ரீ மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் ஆய்வுக் கழகத்தை  தொடங்கி வைத்தார்.




சமீபத்திய செய்திகள்

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்