ராமேஸ்வரம்: பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைப்பதற்காக நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. பிரதமரின் வருகையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் 550 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் ரயில் தூக்கு பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார்.
இதற்கு முன்னதாக வெள்ளிக்கிழமை இலங்கை வந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மாளிகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு அதிபர் அநுரகுமாரா பிரதமரை வரவேற்று கௌரவித்தார். இதைத்தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
அதன்படி இன்று மாலை இலங்கை அதிபர் அநுரகுமாராவை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பில் 8 ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்பிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. குறிப்பாக தமிழக மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இலங்கை பயணத்தை முடித்துவிட்டு, நாளை அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு மண்டபம் பகுதிக்கு காலை 11.50 மணிக்கு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. இதனை தொடர்ந்து ராமேஸ்வரம் பாம்பன் தூக்கு ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார்.
அதன் பிறகு ராமேஸ்வரம் டூ தாம்பரம் இடையேயான ரயில் சேவையை கொடியசைத்து துவங்கி வைக்கிறார். தொடர்ந்து ராமேஸ்வரம் ராமநாதர் கோயிலுக்கு சென்று தான் சாமி தரிசனம் செய்கிறார். அதன் பிறகு ராமேஸ்வரம் அரசு தங்கும் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாம்பன் ரயில் பாலம் சிறப்பு நிகழ்ச்சியில் உரையாற்ற இருக்கிறார். விழா நிறைவடைந்த பிறகு மதியம் 2 மணி அளவில் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு ராமேஸ்வரம் முழுவதும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு 3500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக 10 எஸ்.பி., 40 டி.எஸ்.பி., என உயர் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பாம்பன் பாலம் திறக்கும் இடம், ராமேஸ்வரம் ராமநாத கோவில், பொதுக்கூட்டம் நடைபெறும் ஆலயம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மண்டபம் முதல் ராமேஸ்வரம் கோவில் வரை தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு ராமேஸ்வரம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டு வளையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!
தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!
நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்
தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!
தமிழக பாஜக தலைவர் நியமனம் எப்போது?.. 11 ஆம் தேதி அன்று தெரியும்!
எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்
தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!
அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!
{{comments.comment}}