திருச்சி: பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழ்நாட்டுக்கு வருகை தருகிறார். திருச்சி விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பிரமாண்ட அதி நவீன முனையத்தை அவர் திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, ஜனவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் லட்சத்தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைக்கவுள்ளார்.
ஜனவரி 2ம் தேதி திருச்சிக்கு வருகை தருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு அவர் சிறப்பு நிகழ்த்துகிறார். இதில் ஆளுநர் ஆர். என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
அதன் பின்னர் நடைபெறும் அரசு விழாவில் ரூ. 19,850 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். விமானத்துறை, ரயில்வே, நெடுஞ்சாலை, ஆயில் காஸ், கப்பல்துறை மற்றும் உயர் கல்வித்துறை தொடர்பான திட்டப் பணிகள் இவை.
இதைத் தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். ரூ. 1100 கோடி மதிப்பீட்டில் மிகப் பிரமாண்டமாக, நவீனமாக இந்த முனையம் கட்டப்பட்டுள்ளது. வருடம் தோறும் 44 லட்சம் பயணிகளைக் கையாளும் அளவுக்கு இந்த விமான நிலையத்தில் வசதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் கூட்ட நெரிசலான நேரங்களில் ஒரே சமயத்தில் 35000 பணிகளை கையாள முடியும்.
பிரதமர் மோடி நாளைய தினம் தொடங்கி வைக்கவுள்ள பிற திட்டங்கள்:
மதுரை - தூத்துக்குடி இடையிலான 160 கிலோமீட்டர் ரயில் பாதையை இரட்டிப்பாக்கும் பணி.
திருச்சி, ஸ்ரீரங்கம், சிதம்பரம், ராமேஸ்வரம், தனுஷ்கோடி, உத்தரகோசமங்கை, தேவிப்பட்டனம், ஏர்வாடி, மதுரை உள்ளிட்ட ஊர்களை இணைக்கும் வகையிலான நெடுஞ்சாலைத் திட்டங்கள்.
முகையூர் - மரக்காணம் இடைியலான நான்கு வழிப் பாதைப் பணிகள்.
காமராஜர் துறைமுகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பொது சரக்கு பிரிவு முனையத் தொடக்கம்.
ரூ. 9000 கோடி மதிப்பீட்டிலான இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா.
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் கட்டப்பட்டுள்ள 500 படுக்கை வசதிகள் கொண்ட மாணவர் விடுதி தொடக்க விழா ஆகியவற்றையும் தொடங்கி வைப்பார் பிரதமர் மோடி.
பலத்த பாதுகாப்பு
பிரதமர் மோடி வருகையைத் தொடர்ந்து திருச்சியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பல அடுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. திருச்சி பஸ் நிலையம், ரயில் நிலையத்திலிருந்து புதுக்கோட்டைக்கு, விமான நிலையம் வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதில், விராலிமலை வழியாக போகுமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!
சபரிமலையில் நடிகர்கள் கார்த்தி ரவி மோகன் சுவாமி தரிசனம்!
Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!
கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!
அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்
குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!
good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?
என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!
{{comments.comment}}