பிரயாக்ராஜ்: உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் பிரதமர் நரேந்திர மோடி.
மகாகும்பமேளா என்பது இந்தியாவில் அனைத்து மொழி மக்களையும் ஒன்றிணைக்கும் மிகப் பிரம்மாண்ட விழா. அதிலும் இந்தியாவின் பிரயாக்ராஜ் பகுதியில் அதிக மக்கள் கூடும் மிகப்பிரமாண்ட விழாவாக யுன்ஸ்கோ அங்கீகாரம் கொடுத்துள்ளது. இதனால் மிக முக்கிய நிகழ்வாக கருதப்படும் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் புனிதர்கள், பண்டிதர்கள், ஞானிகள், போகிகள், மக்கள், தலைவர்கள் என கோடிக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் அரிய நிகழ்வாகும். அந்த நன்னாளில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும்.
பக்தர்கள் சிவலோகப் பதவியை அடைவார்கள் என இந்துக்கள் கருதுகின்றனர்.
இதனால் புனித விழாவாக கருதப்படும் கும்பமேளா ஒவ்வொரு வருடம் 12 ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படுகிறது. ஆனால் 144 வருடங்களுக்குப் பிறகு வரும் மகா கும்பமேளா மிகவும் சக்தி வாய்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் 144 வருடங்களுக்குப் பிறகு வரும் கும்பமேளாவை இந்த ஆண்டு சிறப்பாக நடத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. அதன்படி இந்த மகா கும்பமேளா 2025 ஆம் கடந்த மாதம் ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 26 ஆம் தேதி நிறைவடைகிறது.
இரண்டு, மூன்று தலைமுறைகளுக்குப் பிறகு காணும் அரிய நிகழ்வாக 144 வருடங்களுக்கு ஒருமுறை வரும் இந்த மகா கும்பமேளாவில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள ஏராளமான நாட்டு மக்கள், தலைவர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். இதுவரைக்கும் 38.2 கோடிக்கும் அதிகமான மக்கள் புனித நீராடி உள்ளனர். இன்னும் வரும் நாட்களில் மேலும் புனித நீராடுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மகா கும்பமேளாவில் பக்தர்கள் சிரமமின்றி கலந்து கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 1700 ஹெக்டர் பரப்பளவில் வாகனங்கள் நிறுத்துமிடம், 2250 கண்காணிப்பு கேமராக்கள், 15,000 துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகள் என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பக்தர்கள் பாதுகாப்பாக புனித நீராடி வரும் நிலையிலும் கூட தை அமாவாசை அன்று கட்டுக்கடங்காத கூட்டம் ஒரே இடத்தில் திரண்டது. இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து மேலும் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டு ஒரு நாளைக்கு குறைந்த அளவிலேயே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த மகா கும்பமேளாவில் பல்வேறு தலைவர்கள், தொழிலாளிகள், வெளிநாட்டு தலைவர்கள், என பலர் கலந்துகொண்டு புனித நீராடி உள்ளனர். நேற்று பூட்டான் அரசர் புனித நீராடினார். அவருடன் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் நீராடினார்.
அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று திருவேணி சங்கமத்தில் புனித நீராடினார். முன்னதாக டெல்லியில் இருந்து இன்று காலை புதன்கிழமை பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவுக்கு வருகை தந்தார் பிரதமர் நரேந்திர மோடி. பிறகு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். அவருடன் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் பங்கேற்றார். இதற்காக சிறப்பு பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டின் கீழ் பிரயாக்ராஜ் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திருப்பரங்குன்றம் விவகாரம்.. முதல்வர் மென்மையாக இருக்கக் கூடாது.. செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
தினம் ஒரு கவிதை.. கல்லுப் பிள்ளையார்
படகில் சென்று.. திரிவேணி சங்கமத்தில்.. 3 முறை புனித நீராடிய பிரதமர் நரேந்திர மோடி
அஜீத் ரசிகர்களே ரெடியா.. விடாமுயற்சி நாளை ரிலீஸ்.. சிறப்புக் காட்சிக்கு அரசு அனுமதி
144 தடை உத்தரவு வாபஸ்.. திருப்பரங்குன்றம் மலை கோவில், தர்காவுக்குச் செல்ல போலீஸ் அனுமதி!
தொடர் உச்சத்தில் தங்கம் விலை... சவரன் 63,000த்தை கடந்து புதிய உச்சம்!
சாம்சங் நிறுவனத்தில் மீண்டும் சர்ச்சை,3 தொழிலாளர்கள் சஸ்பெண்ட்..தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்
ஈரோடு கிழக்கு.. படு விறுவிறுப்பாக நடைபெறும் இடைத் தேர்தல் வாக்குப் பதிவு.. மக்களிடையே ஆர்வம்
ட்ரெய்லர் மட்டுமே பார்த்துவிட்டு.. இதுதான் என யூகிக்க வேண்டாம்.. விடாமுயற்சி நடிகை.. ஓபன் டாக்..!
{{comments.comment}}