3வது முறையாக பிரதமர் ஆனார் நரேந்திர மோடி.. ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் பதவியேற்றார்!

Jun 09, 2024,10:28 PM IST

டெல்லி:  3வது முறையாக பிரதமராக இன்று இரவு பதவியேற்றுக் கொண்டார் நரேந்திர மோடி. 


தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இன்று பதவியேற்கும் விழா டெல்லி ராஷ்டிரபதி பவன் வளாகத்தில் கோலாகலமாக நடந்தது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இதில் பங்கேற்று பிரதமருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.  கடவுளின் பெயரால் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றுக் கொண்டார். 




72 அமைச்சர்கள்


அதைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்பு தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர்வையில் உள்பட மொத்தம் 72 அமைச்சர்கள் இடம் பெறுகிறார்கள். இதில் கேபினட் அமைச்சர்கள் - 30 பேர்,  இணை அமைச்சர்கள் (தனிப் பொறுப்பு)  - 5 பேர் மற்றும் இணை அமை்சசர்கள் - 36 பேர் ஆவர்.


ஏற்கனவே அமைச்சர்களாக இருந்த 39 பேர் மீண்டும் அமைச்சர்களாகியுள்ளனர். கூட்டணிக் கட்சிகளுக்கு 11 அமைச்சர் பதவி வழங்கப்ட்டுள்ளது. 24 மாநிலங்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. தென் மாநிலங்களைப் பொறுத்தவரை தமிழ்நாட்டிலிருந்து எல். முருகன், கேரளாவிலிருந்து சுரேஷ் கோபி என தலா ஒரு இடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசம், கர்நாடகத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கிடைத்துள்ளனர்.


8000 பேர் முன்னிலையில்


கிட்டத்தட்ட 8000 பேர் முன்னிலையில் பிரதமர் மோடி பதவியேற்பு விழா நடைபெற்றது. பல்வேறு நாட்டுத் தூதர்கள், பல்வேறு மாநில அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், திரைத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் இதில் கலந்து கொண்டனர். இந்தியாவின் அண்டை நாட்டுத் தலைவர்களும் இதில் பங்கேற்றனர்.


பதவியேற்புக்கு முன்னதாக இன்று காலை மகாத்மா காந்தி, அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்று நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். அதேபோல தேசிய போர் நினைவிடத்திலும் மோடி அஞ்சலி செலுத்தினார்.



நேருவுக்குப் பின்னர் நரேந்திர மோடி




இந்தியாவில் இதுவரை பதவியில் இருந்த பிரதமர்களிலேயே ஜவஹர்லால் நேரு மட்டுமே தொடர்ச்சியாக 3 முறை பிரதமர் பதவியை வகித்துள்ளார். 1952, 1957 மற்றும் 1967 ஆகிய ஆண்டுகளில் அவர் பிரதமராக பதவியேற்றார் என்பது நினைவிருக்கலாம். அவருக்குப் பின்னர் அந்தப் பெருமையை நரேந்திர மோடி அடைந்துள்ளார்.


இன்றைய பதவியேற்பு விழாவில் இலங்கை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே, மாலத்தீவு அதிபர் முகம்மது முயிஸு, மொரீஷியஸ் பிரதமர் பிரவீத் குமார் ஜுகுநாத், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா, பூட்டான் பிரதமர் செரிங் டோப்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


பதவியேற்பு விழா நடைபெறும் ராஷ்டிரபதி பவனில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சமீபத்திய செய்திகள்

news

அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை.. தெளிவான முடிவெடுத்த தலைவர் ஜானகி அம்மாள்.. ரஜினிகாந்த்

news

இந்தியாவில் எப்படி ஓட்டுக்களை எண்ணுறாங்க பாருங்க.. அமெரிக்க மானத்தை.. முடிச்சு விட்ட எலான் மஸ்க்!

news

இலவச வாக்குறுதிகள்.. மகாராஷ்டிராவை பாஜக வெல்ல முக்கியக் காரணம்.. இன்னொன்று.. பலவீனமான காங். கூட்டணி!

news

பொங்கல் நாளன்று தேர்வு.. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கிறீர்களா.. மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 24, 2024.. யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி

news

வங்ககடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மிக கன மழைக்கு வாய்ப்பிருக்கா?

news

வளர்ச்சிக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த பெரும் வெற்றி .. மகாராஷ்டிரா மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

news

Priyanka Gandhi.. வயநாடு இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி அதிரடி.. அண்ணன் சாதனையை முறியடித்த தங்கை!

அதிகம் பார்க்கும் செய்திகள்