"இப்படி இழுக்கறீங்களே நியாயமா".. ஆதங்கத்தைக் கொட்டிய கார்கே.. அதுக்கு பிரதமர் மோடி சொன்ன பதில்!

Feb 17, 2024,05:20 PM IST

புனே : எதிர்க்கட்சிகளில் முக்கிய பொறுப்பில் இருக்கும் பெரிய தலைவர்களை குறிவைத்து பாஜக தன் பக்கம் இழுத்து வருவது பற்றி  நேரடியாக பிரதமர் நரேந்திர மோடியிடமே கேட்டுள்ளார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே. ஆனால் அதற்கு மோடி சொன்ன பதிலால் வாய் அடைத்து போய், வேறு வார்த்தை எதுவும் பேச முடியாமல் திரும்பி வந்துள்ளாராம்.


எதிர்க்கட்சிகளை சேர்ந்த பலரும் தொடர்ந்து தங்கள் கட்சிகளில் இருந்து விலகி பாஜக.,வில் இணைந்து வருகிறார்கள். இதற்கு பாஜக தான் காரணம் என்றும், எதிர்க்கட்சியில் இருக்கும் முக்கிய தலைவர்களை பேரம் பேசியும், பதவி ஆசை காட்டியும் பாஜக தன் பக்கம் இழுத்து வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. சமீபத்தில் மகாராஷ்டி முன்னாள் முதல்வராக இருந்த அசோக் சவான், காங்கிரஸ் கட்சியின் இருந்து விலகியதுடன் தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்து விட்டு, பாஜக.,வில் சென்று இணைந்துள்ளார்.


இது பற்றி லோனாவாலாவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் இரண்டு நாள் தேர்தல் பயிற்சி நிகழ்வில் கலந்து கொண்ட மல்லிகார்ஜூன கார்கே, கட்சி தொண்டர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், தோல்வி பயத்தின் காரணமாக தான் பாஜக, எதிர்க்கட்சியில் இருக்கும் தலைவர்களை தன்னுடைய பக்கம் இழுத்து வருகிறது. இது அக்கட்சியின் கோழைத்தனத்தையே காட்டுகிறது என்றார். 




மேலும் பேசிய அவர், பார்லிமென்டில் நடைபெற்ற தேநீர் விருந்தின் போது இது பற்றி பிரதமர் மோடியிடம் நேரடியாகவே நான் கேட்டேன். இன்னும் எத்தனை அமைச்சர்கள், முன்னாள் முதல்வர்களை உங்கள் பக்கம் இழுக்க போகிறீர்கள் என்ற கேட்டேன். அதுவும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இருந்து முக்கிய தலைவர்களை உங்கள் பக்கம் இழுப்பது சரியா என்றும் கேட்டேன். அதற்கு அவர், அவர்களாக விரும்பி வருகிறார்கள். தாங்களாக பாஜக.,வில் இணைபவர்களை என்ன செய்ய முடியும்? என்றார். 


தோல்வி பயத்தினால் தான் எதிர்க்கட்சியில் இருப்பவர்களை இப்படி உங்கள் பக்கம் இழுத்து வருகிறீர்களா என்று கேட்டேன். பாஜக அரசின் பணிகளை பார்த்து, அது பிடித்ததால் அவர்களாக வந்து பாஜக.,வில் சேர்கிறார்கள் என்றார் பிரதமர் நரேந்திர மோடி. 


கட்சி தொண்டர்களும், வாக்காளர்களும் சிலரை பெரிய தலைவர்கள் ஆக்கி விடுகிறார்கள். கட்சியில் பெரியதாக வளர்ந்த பிறகு அவர்கள் ஓடி விடுகிறார்கள். இதற்கு அவர்களின் கோழைத்தனத்தை தவிர வேறு எதுவும் காரணம் அல்ல. ஆனால் நாம் அதற்காக எல்லாம் பயந்து விடக் கூடாது. அப்படி பயந்தால் வீழ்ந்து விடுவோம். ஆனால் நாம் போராடினால் கண்டிப்பாக ஒரு நாள் வெற்றி பெறுவோம். நீங்கள் அனைவரும் அதற்கு தயாராக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன் என்றார்.


காங்கிரஸ் கட்சியில் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கான குறைந்த பட்ச ஆதார விலை என்பது சட்டப்பூர்வ உறுதி செய்யப்படும் என ராகுல் காந்தி சொல்லி விட்டார் என்றும் மல்லிகார்ஜூன கார்கே, கட்சி தொண்டர்களிடம் தெரிவித்தார். இதை மக்கள் கண்டிப்பாக வரவேற்பார்கள் என்றம் அவர் தெரிவித்துள்ளார். 


குறைந்த பட்ச ஆதார நிலையை சட்டப்பூர்வமாக்க வேண்டும், சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், விவசாயிகளுக்கும் விவசாய தொழிலாளர்களுக்கும் பென்ஷன் வழங்க வேண்டும், விவசாயத்திற்கான மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது, விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லியில் ஏராளமான பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பதற்காக ராகுல் காந்தி, ஏற்கனவே அங்கு சென்று வந்தார். இந்நிலையில் விவசாயிகள் வலியுறுத்தும் கோரிக்கைகளை தாங்கள் நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து, விவசாயிகளின் கவனத்தை தங்கள் பார்க்க ஈர்க்கும் வகையில் காங்கிரஸ் இப்படி ஒரு வாக்குறுதியை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்