டெல்லி: கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் அணி எது, இந்தியாவா பாகிஸ்தானா என்ற கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோடி சுவாரஸ்யமான பதிலைக் கொடுத்துள்ளார்.
இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே இரு நாடுகள் இடையான போர் என்று ரீதியில் தான் பார்க்கப்படுகிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் மோதினாலே அந்தப் போட்டி பெரும் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்திவிடுகிறது. மற்ற போட்டிகளுக்கு கூடும் கூட்டத்தை விட இந்தப் போட்டிகளுக்கு அதிக அளவில் கூட்டம் கூடுகிறது.
ஒரு காலத்தில் ஷார்ஜாவில் நடந்து வந்த இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தன.
அந்த அளவுக்கு இந்தியா பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டிகள் எப்போதுமே ஹாட் ஆன ஒரு விளையாட்டாகவே இருக்கிறது. கிரிக்கெட் மட்டுமல்லாமல் எந்த போட்டியாக இருந்தாலும் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதினால் அது உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. இது இரு நாட்டு ரசிகர்களிடையே நிலவி வரும் நீண்ட கால போக்காக மாறி உள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் கசப்புணர்வு பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக இந்த விளையாட்டுப் போட்டிகளும் கூட அதன் தாக்கத்தை உணரும் நிலையே நீண்ட காலமாக நிலவி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணி பல வருடங்களாகவே பாகிஸ்தானுக்கு செல்வதை தவிர்த்து வருகிறது. பாகிஸ்தானில் எந்த போட்டியிலும் அது கலந்து கொள்வதில்லை. கிரிக்கெட் மட்டுமல்லாமல் வேறு எந்த விளையாட்டு போட்டியிலும் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாடுவது இல்லை என்பதை ஒரு கொள்கையை முடிவாக வைத்து செயல்பட்டு வருகிறது.
சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டி தொடர் கூட பாகிஸ்தான் தான் நடத்தியது. இருப்பினும் அந்தப் போட்டியில் இந்தியா பாகிஸ்தானுக்கு சென்று கலந்து கொள்ளவில்லை. மாறாக இந்தியாவுக்காக துபாயில் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி கோப்பையையும் வென்று அசத்தியது.
இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் அணிகளில் யார் சிறந்த அணி என்ற கேள்வி பிரதமர் நரேந்திர மோடி இடம் வைக்கப்பட்டது. படு சுவாரசியமான இந்த கேள்விக்கு படு டிப்ளமேட்டிக்காக பிரதமர் பதிலளித்துள்ளார். அமெரிக்கா யூ டியூபரான லெக்ஸ் பிரிட்மேனுக்கு அளித்த பேட்டியில் இந்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பிரதமர் அளித்த பதில் இது
இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடு கிரிக்கெட் அணிகளில் யார் பெரியவர் என்று கேட்கிறீர்கள். கிரிக்கெட்டில் நான் டெக்னிக்கலான விஷங்களை ஜட்ஜ் செய்யும் அளவுக்கு எக்ஸ்பர்ட் கிடையாது. அது குறித்து தெரிந்தவர்கள் தான் யார் பெரிய அணி யார் சிறந்த வீரர்கள் என்பதை சொல்வது சரியாக இருக்க முடியும். அவர்களால் தான் அதை சரியாக சொல்ல முடியும். இருப்பினும் சில நேரம் போட்டி முடிவுகளை வைத்து சில விஷயங்களை நாம் ஊகிக்க முடியும். சமீபத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஒரு போட்டி நடந்தது, அதில் வந்த முடிவு குறித்து அனைவருக்குமே தெரியும், இந்த அளவுக்கு தான் எனக்கு தெரியும் என்றார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடி மேலும் கூறுகையில், ஒட்டுமொத்த உலகுக்கும் சக்தி கொடுக்கக் கூடிய வல்லமை விளையாட்டுக்கு உண்டு. பல்வேறு நாடுகளையும் மக்களையும் வேறுபாடுகளைத் தாண்டி இணைக்கும் சக்தி விளையாட்டுக்கு உண்டு. எனவேதான் அந்த விளையாட்டுக்கு அதிக மரியாதையை நான் தருகிறேன். மனித புரட்சியில் விளையாட்டுக்கு முக்கியப் பங்கு உண்டு. அவை வெறும் விளையாட்டு மட்டுமல்ல., மாறாக மக்களை இணைக்கும் அன்புச் சங்கிலியாகும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
இதேபோல இன்னொரு கேள்வியும் பிரதமரிடம் கேட்கப்பட்டது. கால்பந்து விளையாட்டில் உங்களுக்குப் பிடித்த வீரர் மாரடோனவா அல்லது லியோனல் மெஸ்ஸியா என்று பிரிட்மேன் கேட்டார். அதற்கு பதில் அளித்த பிரதமர் மோடி, இந்தியாவின் பல பகுதிகளில் கால்பந்து கலாச்சாரம் பிரமிக்கத்தக்க வகையில் உள்ளது. எங்களது மகளிர் கால்பந்து அணி பல சாதனைகளைச் செய்துள்ளது. ஆடவர் அணியும் சிறப்பாக ஆடி வருகிறது. கடந்த காலங்களை எடுத்துக் கொண்டால், குறிப்பாக 80களில் மாரடோனா மிகச் சிறந்த வீரராக விளங்கி வந்தார். இன்றைய தலைமுறையிடம் கேட்டால் மெஸ்ஸி பெயரைச் சொல்வார்கள் என்றார் பிரதமர் மோடி.
கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!
அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி
கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!
மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!
தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!
எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!
அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!
{{comments.comment}}