சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில் கட்டப்பட்டுள்ள மிகப் பிரமாண்டமான வைர சந்தை அலுவலக வளாகத்தை (Surat Diamond Exchange) பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
இதுதான் உலகத்திலேயே மிகப் பெரிய அலுவலக வளாகம் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் மிகப் பெரிய அலுவலக வளாகம் என்ற பெருமையுடன் இருந்து வந்தது அமெரிக்காவின் பென்டகன் அலுவலக வளாகம்தான். அமெரிக்க ராணுவத் தலையமைகம்தான் பென்டகன். இது 1943ம் ஆண்டு திறக்கப்பட்டது. கிட்டத்தட்ட 60.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் இது அமைந்துள்ளது.
தற்போது இந்த அலுவலக வளாகத்தை இந்தியா முந்தி புதிய சாதனை படைத்துள்ளது. சூரத்தில் கட்டப்பட்டுள்ள Surat Diamond Exchange அலுவலக வளாகம் 67 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 32 பில்லியன் ரூபாய் செலவில் இந்த பிரமாண்ட அலுவலக வளாகம் கட்டப்பட்டுள்ளது.
இந்த பிரமாண்ட அலுவலக வளாகத்தில் மிகப் பெரிய நகை மால் ஒன்று இடம் பெற்றுள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான நகைக் கடைகள் இடம் பெறுகின்றன. இதுதவிர சர்வதேச வங்கிகளின் கிளைகளுக்கும் இங்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்புடன் கூடிய பாதுகாப்பு பெட்டகங்களும் இங்கு அமைக்கப்படுகின்றன.
இந்தியாவின் வைர ஏற்றுமதியின் மையமாக நீண்ட காலமாகவே மும்பைதான் இருந்து வந்தது. அதேசமயம், இந்தியாவின் வைர நகரமாக சூரத்தான் திகழ்கிறது. உலகின் வைரங்களில் கிட்டத்தட்ட 90 சதவீத வைரங்கள் சூரத்தில்தான் வெட்டி எடுக்கப்பட்டு பாலிஷ் செய்ய்படுகின்றன. அவைதான் அமெரிக்கா, சீனா சந்தைகளை பெருமமளவில் ஆக்கிரமித்துள்ளன.
இந்த நிலையில் சூரத்திலேயே மொத்த வைர வணிகத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில் இந்த பிரமாண்ட வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. சூரத்தில் உள்ள வைர ஆய்வு மற்றும் விற்பனை நகரிலேயே இந்த பிரமாண்ட அலுவலக வளாகம் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 15 மாடிகளைக் கொண்ட கட்டடங்கள் இங்கு இடம் பெற்றுள்ளன. 4700 அலுவலகங்களை இங்கு அமைக்க முடியும். இதில் 130 அலுவலகங்கள் தற்போது பயன்பாட்டுக்கு வந்து விட்டன.
2026ல் சட்டமன்ற தேர்தல்.. நாலே கூட்டணிதான்.. விறுவிறுப்பாகும் கட்சிகள்.. பரபரக்கும் அரசியல் களம்!
தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு.. வானகரம் விழாவில் அறிவிப்பு!
பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு.. மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன்.. அமைச்சர் பொன்முடி!
என்னை யாரும் சந்திக்க வர வேண்டாம்... டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
அதிமுக கூட்டணி அறிவிப்பு.. முதல்வர் மனதில் இடிபோல இறங்கியுள்ளது.. எடப்பாடி பழனிச்சாமி
தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு இருப்பதால்.. கூட்டணி குறித்து யோசித்து முடிவு எடுப்போம்.. பிரேமலதா
பாஜக திமுக மறைமுக கூட்டணி அம்பலமாகிவிட்டது.. தவெக தலைவர் விஜய்
அதிமுக- பாஜக கூட்டணி.. தோல்வி கூட்டணி.. முதல்வர் மு.க ஸ்டாலின் கடும் விமர்சனம்!
பொன்முடி பேச்சு.. ஏப்., 16ம் தேதி அதிமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிச்சாமி!
{{comments.comment}}