முதல் முதலாக.. நீருக்கடியில் மெட்ரோ.. மேற்கு வங்கத்தில் அசத்தல்.. தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

Mar 06, 2024,06:15 PM IST

கொல்கத்தா: நாட்டிலேயே முதல் முறையாக நீருக்கடியில் அமைக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவையை கொல்கத்தாவில் திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதேபோல ஆக்ரா மெட்ரோ ரயில் சேவையையும் அவர் தொடங்கி வைத்தார்.


இந்தியா முழுவதும் 27 நகரங்களில் மெட்ரோ திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய நிதியுதவியுடன், மாநில அரசுகளும் இணைந்து இதை செயல்படுத்துகின்றன. தினசரி ஒரு கோடிக்கும் மேலான பயணிகள் மெட்ரோ சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த மெட்ரோ சேவை சமீப காலமாக பயணிகளின் அத்தியாவசிய தேவையாக மாறி வருகிறது. 


விரைவாக செல்லுதல், போக்குவரத்து நெரிசல் இல்லாதது, சொகுசு பயணம், சுத்தமான உட்புற அமைப்பு, பயணிகளைக் கவரும் மெட்ரோவின் வடிவமைப்பு உள்ளிட்ட காரணங்களால் மெட்ரோ திட்டம்  மக்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம்  ஆக்ராவில், மெட்ரோ திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.




ஆக்ரா மெட்ரோ ரயில் இரண்டு பாதைகளைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த நீளம் 29.65 கிலோமீட்டர். இது தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை, சிக்கந்திரா, ஐ எஸ் பி டி, ராஜா கி மண்டி ரயில் நிலையம், மருத்துவக் கல்லூரி, ஆக்ரா ரயில் நிலையம், உள்ளிட்ட முக்கிய சுற்றுலா இடங்களை இணைக்கும் ரயில் திட்டம் ஆகும்.


கொல்கத்தாவில்  நீருக்கடியில் மெட்ரோ பாதை


இதேபோல கொல்கத்தா மெட்ரோவில் புதிய சாதனையாக, நீருக்கடியில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.  இந்ததிட்டம் நகர்ப்புற போக்குவரத்தில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.  இதை இன்று பிரதமர் நரேந்திர மோடி கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.


ஹூக்ளி ஆற்றின் கீழ் பூமிக்கு அடியில் சுமார் 50 அடி ஆழத்தில் மெட்ரோ சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ ரயில் சேவை ஹவுரா மைதானம் முதல் எக்ஸ்பிளனேடு வரை ‌செல்லும். இது 16.6 கிலோ மீட்டர் தூரத்தில் நீருக்கடியில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.


இதே விழாவில் ஆக்ரா மெட்ரோ திட்டத்தையும் பிரதமர் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தாஜ்மஹால் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் சென்று வர வசதியாக  மார்ச் 6 2024 முதல் இந்த மெட்ரோ ரயில் சேவை செயல்பாட்டில் வந்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

சிங்கம்-கழுகு கூட்டணியா?.. சிலாகிக்கும் நா.த.க.. சீமான் சொன்ன பதில்.. ரஜினியுடன் சந்திப்பு ஏன்?

news

ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

news

Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்